பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

மலையாளத்தில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி துவங்கி கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டியாளர்களாக லட்சுமி மற்றும் மஸ்தானி என்கிற இருவர் இடையில் நுழைந்தனர். இந்த வீட்டில் ஆரம்பத்தில் இருந்தே ஆதிலா மற்றும் நூரா என்கிற ஒரு பாலின ஜோடி பங்கேற்றுள்ளது. லட்சுமியும் மஸ்தானியும் தாங்கள் வந்ததிலிருந்து இந்த ஜோடியை கடுமையாக விமர்சித்தும் கிண்டலடித்தும் பேசி வந்தனர்.
கடந்த வாரம் சனிக்கிழமை வந்த மோகன்லால் மஸ்தானி மற்றும் லட்சுமி இருவரின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன் அவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள் தான் என்று லட்சுமி மற்றும் நூராவுக்கு ஆதரவாக பேசினார். அவர் கடுமை காட்டியதன் விளைவோ என்னவோ ஞாயிற்றுக்கிழமை மஸ்தானி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்த நிலையில் மோகன்லால் இப்படி எல்ஜிபிடிக்யூ (LGBTQ) மனிதர்களுக்காக பரிந்து பேசியது பொதுவெளியில் சோசியல் மீடியாவில் ஒரு மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது. பலர் மோகன்லாலின் கருத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனாலும் சிலர் எல்லோரும் சமம் என்று சொன்னாலும், இப்போது வரை எதற்காக மாற்றுப் பாலினத்தவரிடமும் ஒரு பாலின ஜோடிகளிடமும் இருந்து ரத்ததானம் பெறுவது தடை செய்யப்பட்டு உள்ளது என்கிற கேள்வியை எழுப்பி உள்ளனர், இது குறித்து நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.




