மீண்டும் சிவகார்த்திகேயனிடம் கதை சொன்ன ஏ.ஆர்.முருகதாஸ் | பைசன் படத்தின் 2வது பாடல் வெளியானது | ‛யாத்திசை' இயக்குனருடன் இணையும் ரவி மோகன் | பிளாஷ்பேக்: பாலுமகேந்திரா ஓவியமாய் தீட்டிய முதல் திரைக்காவியம் “கோகிலா” | அக். 10ல் ஒளிபரப்பாகும் ‛வேடுவன்' வெப் தொடர் | மதராஸி ஓடிடி வெளியீடு எப்போது | சிம்புதேவன் இயக்கத்தில் விமல்? | 21 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-ரிலீஸ் ஆகும் அட்டகாசம் | ‛சூர்யா 46' படத்தின் ஓடிடி உரிமம் இத்தனை கோடியா? | வேறொருவரை வைத்து தெலுங்கு டப்பிங்: 'கிஸ்' இயக்குனர் மீது விடிவி கணேஷ் அதிருப்தி |
தனுஷ் இயக்கி நாயகனாக நடித்துள்ள 'இட்லி கடை' அக்டோபர் 1ம் தேதி வெளியாக உள்ளது. ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இப்படத்தில் அருண் விஜய், நித்யா மேனன், ஷாலினி பாண்டே, சத்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இதனிடையே, சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக 'இட்லி கடை' இதுதான் என ஒரு கதையை உலவ விட்டுள்ளார்கள். அந்தப் பதிவையும் பலர் ஷேர் செய்து வைரலாக்கி உள்ளனர். அந்தக் கதையை படித்துப் பார்த்தால், ரஜினிகாந்த், சத்யராஜ், அம்பிகா நடித்து வெளிவந்த 'மிஸ்டர் பாரத்' கதை போலவே உள்ளது.
படம் வந்த பிறகுதான் சமூக வலைத்தளங்களில் உலவும் கதை உண்மையா, பொய்யா என்பது தெரிய வரும். அதுவரை அந்தக் கதை இன்னும் அதிகமாகவே சுற்றி வரும். அந்தக் கதை இதோ,
“பரம்பரை பணக்காரர் சத்யராஜ் 5 star hotel வச்சிருக்கார். திடீர்னு அவர் ஹோட்டல்ல வர்ற ஆளுங்க கம்மி ஆகுறாங்க. என்னானு பாத்தா, இவர் ஹோட்டல் ஆப்போசிட்லயே ஒரு சின்ன பையன் இட்லி கடை போட்ருக்கார். அவர் தான் தனுஷ். ஆரம்பத்துல அடியாட்களை அனுப்பினாலும், ஒரு கட்டத்துல அப்டி அந்த இட்லில என்னதான் இருக்குனு பாக்குறதுக்கு கூட்டத்தோட கூட்டமா போய் சாப்பிடுறார். அந்த இட்லிய நாக்குல வச்சதும் 25 வருஷத்துக்கு முன்னாடி தான் ஏமாற்றிய காதலி சமைச்சு எடுத்துட்டு வந்த இட்லியும், தனுஷ் விக்கிற இட்லியும் ஒரே டேஸ்ட்ல இருக்கு.. அப்டியே தனுஷ் பின்னாடி பாத்தா இட்லி கடையில தான் பழைய காதலி போட்டோ இருக்கு. அவர் தான் தனுஷோட அம்மா.. தனுஷ் தான் புள்ளைன்னு தெரிஞ்சு தன்னோட சொத்தை தனுஷிற்கு எழுதி வச்சாரா... இரண்டாவது சம்சாரத்துக்கு பொறந்த அருண் விஜய் இத தெரிஞ்சுக்கிட்டு அவர அண்ணனா ஏத்துக்கிட்டாரா... என்கிறது தான் படத்தோட மீதி கதை...'”.