வெளிநாட்டினர் கொண்டாடும் படத்தை இங்கு 'குப்பை' என்கிறார்கள்: வர்ஷா வேதனை | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் | 'குடும்பம் ஒரு கதம்பம்' புகழ் குரியகோஸ் ரங்கா காலமானார் : யார் இவர்... சின்ன ரீ-வைண்ட்! | வசூல் நாயகிகளில் முதலிடம் பிடித்த கல்யாணி பிரியதர்ஷன் | தமிழ் மார்க்கெட்டை பிடிக்கும் மலையாள படங்கள் | மாநாடு கவலை அளிக்கிறது : விஜய்யை தாக்கிய வசந்தபாலன் | 17 ஆண்டு கனவு நனவானது : ஹீரோவான ‛பாண்டியன் ஸ்டோர்ஸ்' குமரன் நெகிழ்ச்சி | ரூ.550 கோடியை தாண்டியதா கூலி வசூல் |
கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி நிறுவனம் சார்பாக வெற்றிமாறன் தயாரிப்பில், வர்ஷா இயக்கத்தில், அனுராக் காஷ்யப் வழங்கும் படம் “பேட் கேர்ள்”. அஞ்சலி, சரண்யா, ஹ்ரிது ஹரூன், டீஜே அருணாசலம் மற்றும் பலர் நடித்துள்ளனர். வருகிற 5ம் தேதி வெளியாகிறது.
படத்தின் அறிமுக நிகழ்வில் படம் பற்றி இயக்குனர் வர்ஷா கூறியதாவது: 7 மாதத்திற்கு முன்பு டிரைலர் வெளியீட்டு விழாவில் முதன் முதலாக மேடை ஏறினேன். அன்று முதல் இன்று வரை பல நல்ல விஷயங்கள் நடந்திருக்கிறது. இந்த படம் பல நாடுகளில் பட திருவிழாவில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
13 நாடுகளில் 13 பட திருவிழாக்களில் பங்கேற்று வந்திருக்கிறேன். பேட் கேர்ள் பட குழுவினர் அனைவருக்கும் நன்றி. முக்கியமாக இந்த வாய்ப்பு கொடுத்த வெற்றிமாறன் சாருக்கு மிக்க நன்றி. வெளிநாடுகளில் திரையிடப்பட்டபோது அனைவரும் அங்கு கொண்டாடினார்கள். அதே நேரத்தில் இங்கு 'குப்பை படம்' என்று கூறினார்கள். பல நாடுகளில் எழுந்து நின்று கைதட்டி மரியாதை கொடுத்தார்கள். பல நாடுகளில் சுற்றி இன்று இப்படம் பிறந்த வீட்டிற்கு வந்திருக்கிறது.
இப்படம் பிடிக்கவில்லை என்றால், அனைவருக்கும் அவரவருடைய வாழ்க்கையை வாழ்வதற்கும் முடிவெடுப்பதற்கும் உரிமை இருக்கிறது என்று ஏற்றுக்கொள்ளுங்கள். பல படங்களில் பெண்களை பாலியல் பொருளாக தான் காண்பிக்கிறார்கள். அதுவரை பிரச்னை இல்லை ஆனால் பெண்கள் தங்களுக்கு என்று ஆசை, விருப்பம் என்று கூறும் போது தான் பிரச்னையாக மாறுகிறது.
பாலியல் உறவு ரீதியாக பேசக்கூடாது என்பதை விட எப்படி பேச வேண்டும் என்பது இருக்கிறது. இப்படி வெளிப்படையாக பேசினால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்குமா என்று யோசிக்காதீர்கள். உரையாடல் தான் மிகவும் உதவியாக இருக்கும்.
பெண்கள் கலாசாரத்தை சீரழிக்கிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள். பெண்களா கலாசாரத்தை பாதுகாக்க வேண்டும்? கலாசாரம் தானே பெண்களை பாதுகாக்க வேண்டும்.
வெற்றிமாறன் சாரிடம் பணியாற்றும் போது மிகவும் கடினமாக இருக்கும். இந்த கேமராவை ஏன் இங்கே வைத்தீர்கள்? இதுபோன்று ஏதாவது கேட்டுக் கொண்டே இருப்பார். நாங்கள் அவ்வப்போது நம்பிக்கை இழந்து விடுவோம். ஆனால், அனுராக் சார் தான் இழந்த நம்பிக்கையை மீட்டுத் தருவார். வெற்றிமாறன் சாரிடம் கதை எழுதக் கற்றுக் கொண்டேன். தனுஷ் சாரிடம் எப்படி முடிப்பது என்பதை கற்றுக்கொண்டேன், என்றார்.