உண்மை கதையில் யோகி பாபு | வெற்றி ஜோடியாக தமிழில் அறிமுகமாகும் தெலுங்கு நடிகை | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக திரும்பும் ஷ்ரத்தா | 'மாமன்' சூரியின் கதை: இயக்குனர் தகவல் | பிளாஷ்பேக்: பல தலைமுறைகளை வாழ வைத்த 'மைடியர் குட்டிச்சாத்தான்' | பிளாஷ்பேக்: காதல் சின்னத்தை மீட்டெடுக்க விரும்பிய வி.என்.ஜானகி | மே 1 : சினிமா ரசிகர்களுக்காக பல வெளியீடுகள் | கவினின் 'டாடா' படம் ஓடிடி.,யில் எங்கே போனது? | ஓடிடி.,யில் விலை போகாத 'கேங்கர்ஸ்' | வேலை நாட்களில் எடுபடாத விஜய்யின் சச்சின் |
‛‛எங்கே செல்லும் இந்தப் பாதை...'' என்று தமிழ் சினிமாவில் ஒரு பாடல் உள்ளது. அதைப் போலவே இப்போது தமிழ் சினிமா எதை நோக்கி செல்கிறது என தெரியவில்லை. ஆண்டுக்கு 200 படங்களுக்கு மேல் வருகின்றன. இவற்றில் பத்து சதவீதம் கூட தேறுவதில்லை. ஒரு பக்கம் ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகள் கொண்ட படங்களும், இன்னொரு பக்கம் ஜாதி ரீதியான பிரிவினையை தூண்டும் படங்களும் அதிகம் வர துவங்கி உள்ளன.
இவைகள் தவிர்த்து ஆபாசமான குப்பை படங்கள் தனி ரகம். ஏற்கனவே, ‛இருட்டு அறையில் முரட்டு குத்து, 90 எம் எல்' போன்ற ஆபாச கலாச்சார சீரழிவு படங்கள் வெளியாகி சர்ச்சைகளை சந்தித்தன. இப்போது பெண்ணியம் பேசுகின்றோம் என்ற பெயரில் பள்ளி மாணவர்களையும் மாணவிகளையும் சீரழிக்கும் விதமாக ‛பேட் கேர்ள்' என்ற ஒரு ‛பேட்' படம் வெளிவரப் போகிறது.
இந்த படத்தின் வண்டவாளம் டீசர் மூலம் தண்டவாளத்தில் ஏறியது. சமீபத்தில் வெளியான இந்த டீசரில் பள்ளியில் படிக்கும் மாணவியாக நடித்துள்ள நாயகி அஞ்சலி சிவராமன் என்பவர், ‛பள்ளியில் கிளாஸ் லீடராக இருப்பதைவிட பாய் பிரண்ட் இருப்பது தான் மாஸ்....' எனக் கூறுகிறார். அது மட்டுமல்ல அவர் பார்ட்டி போவது, தண்ணி அடிப்பது, செக்ஸ் வைத்துக் கொள்வது... என சகலமும் செய்கிறார். அவர் குழுவில் ஒரு பெண், ‛எல்லா ஆண்களையும் கொல்லணும்' என்கிறார் அதற்கு இன்னொருவர் ‛ஆண்களுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும்' என்கிறார்.
வீட்டில் பெற்றோர் கண்டித்தால் ‛நீ எதை செய்யக் கூடாதுன்னு சொல்றியோ நான் அதைத்தான் செய்வேன், என்னை தடுக்க நினைத்தால் அந்த பையனுடன் ஓடிப் போவேன். தற்கொலை செய்வேன்' என மிரட்டும் காட்சிகளும் டீசரில் உள்ளன. இரண்டு நிமிட டீசரிலேயே இதுபோன்ற கண்றாவியான விஷயங்கள் உள்ளன என்றால் மொத்த படத்தில் இன்னும் என்னென்ன சொல்லித் தொலைத்திருக்கிறார்ளோ தெரியவில்லை.
இப்படியொரு டீசர் வெளியானதும் எதிர்ப்பு அலைகள் கிளம்பி உள்ளன. நேற்று முதல் இந்த படத்தை வலைதளங்களில் கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர். பெண்ணியம் பேசுகிறோம் என ஏன் இந்த மாதிரி படங்களை எடுக்கிறீர்கள் என இந்த படத்தை தயாரித்துள்ள தமிழ் இயக்குன வெற்றிமாறன் மற்றும் ஹிந்தி இயக்குனர் அனுராக் காஷ்யப் ஆகியோரையும், இந்த படத்தின் டீசரை தங்களது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து பாராட்டிய இயக்குனர் பா.ரஞ்சித், நடிகர் விஜய்சேதுபதி போன்றோரையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இதில் இன்னொரு கொடுமையான விஷயம், இந்த படத்தை இயக்கியிருப்பது ஒரு பெண். அவர் பெயர் வர்ஷா பரத். இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் அவர் பேசும்போது, ‛‛பெண் என்றால் ஒரு பூ, பத்தினி, தெய்வம், தாய்மை... இது மாதிரி நிறைய விஷயங்கள் உள்ளன. இந்த விஷயங்களை எல்லாம் தூக்கி சுமக்க வேண்டாம் என நினைக்கிறேன்'' என தெரிவித்தார். உடனே அங்கிருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
‛‛படிப்பு தான் நம்மல காப்பாத்தும். நல்லா படி முன்னுக்குவானு சொன்ன வெற்றிமாறன் இப்ப பணம் புகழ் எல்லாம் வந்த பிறகு இப்படியொரு கேவலமான சிந்தனைகளை சமூகத்தில் விதைக்குறார்''
‛‛என்ன முட்டாள்தனம் இது வெற்றிமாறன். இப்படி ஒரு படத்தை தயாரிக்க உங்களுக்கு வெட்கமாக இல்லையா. பள்ளி செல்லும் குழந்தைகளை இதுபோன்ற கேவலமான திரைப்படங்களைப் காட்டி கெடுக்காதீர்கள். நம் தமிழ்நாட்டுக்கு பேட் கேர்ள் போன்ற படம் தேவையில்லை. இது பெண்ணியம் அல்ல'' என பலரும் வெற்றிமாறனுக்கு கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
பெண்ணுரிமை பற்றி பேச எவ்வளவோ விஷயங்கள் உள்ளன. அதையெல்லாம் விடுத்து குடிப்பது, புகை பிடிப்பது, பாய் பிரண்ட் வைத்துக் கொண்டு அவர்களுடன் சுற்றுவது, சல்லாபத்தில் ஈடுபடுவது என பெண்ணியம் என்றால் என்ன என்று தெரியாமல், ஆபாச படத்தை எடுத்துள்ளனர்.
கதை இல்லாதவர்கள் தான் சதையை வைத்து படம் எடுப்பார்கள். இதுவும் அப்படிப்பட்ட படமா என்று பலரும் சந்தேகம் எழுப்புகின்றனர். இந்த படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் எப்படி கொடுத்தார்கள்?