‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தனுஷ் நடித்துள்ள முதல் இந்தி படமான, "ராஞ்சனாவின் வெற்றி, அவருக்கு தொடர்ந்து, இந்தி படங்களில் நடிப்பதற்கான ஆர்வத்தைக் கொடுத்துள்ளது. இதனால் அவருக்கு, இந்தியில் அதிக வாய்ப்பு கிடைக்கும் என்று, பாலிவுட்டில் பேசப்படுகிறது. தனுஷின் அடுத்த இந்தி படம் குறித்து, அவரே இன்னும் முடிவெடுக்காத நிலையில், கோடம்பாக்கத்திலிருந்து, இந்திக்கு சென்று நடித்து வரும் தமன்னா, இலியானா உள்ளிட்ட சில நடிகைகளின் கவனம், அவர் நடிக்கப் போகும் படங்களின் மீது திரும்பியுள்ளதாம். இதில் தமன்னா, எப்படியாவது, அவருடன் ஜோடி சேர்ந்து விட வேண்டும் என்ற தீவிர முயற்சியில் இறங்கியுள்ளாராம். சமீபத்தில் அவரை சந்தித்து, "ராஞ்சனா படத்தில், அவரது நடிப்பு குறித்து புகழ் மடல் வாசித்தவர், "இந்த படத்திலிருந்து நான், உங்களது ரசிகையாகி விட்டேன் என்றும் கூறினாராம்.