அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
சுதீஷ் சங்கர் இயக்கத்தில் வடிவேலு நடித்த 'மாரீசன்' படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. அதை பார்த்தால் 'மாமன்னன்' பாணியில் மீண்டும் ஒரு சீரியஸ் கதையில் வடிவேலு நடித்துள்ளார் என தெரிகிறது. ஞாபகமறதி நோயால் அவதிப்படும் வடிவேலுவிடம் இருக்கும் பணத்தை ஆட்டை போட நினைக்கிறார் திருடனான பஹத் பாசில், அதை தடுக்க நினைக்கிறார் போலீசான கோவை சரளா. கன்னியாகுமாரியில் இருந்து திருவண்ணாமலைக்கு பைக்கில் பஹத்துடன் பயணம் செய்கிறார் வடிவேலு. அப்போது திருடனான பஹத் மாறினாரா? எப்படி மாறினார் என்ற ரீதியில் கதை செல்வதாக டீசர் சொல்கிறார்.
'மாமன்னன்' படத்தில் அழுத்தமான ரோலில் நடித்த வடிவேலு, 'கேங்கர்ஸ்' படத்தில் காமெடி செய்தார். இப்போது மீண்டும் மாரீசன் படத்தில் குணசித்திர ரோலில் நடித்துள்ளார். கோவை சரளாவுக்கும் சீரியஸ் ரோல். இருவரும் பல ஆண்டுக்குபின் இதில் நடித்துள்ளார். ஆனால், இருவருமே காமெடி பண்ணவில்லை என்பது கூடுதல் தகவல். அதேசமயம், சற்றே காமிக்கலான ரோலில் நடித்து இருக்கிறார் பஹத்பாசில். பல படங்களில் வில்லனாக நடித்தவருக்கு இதில் நேர் எதிர் கேரக்டராம்.