கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் | பிளாஷ்பேக்: ஒரே நாளில் வெளியான 3 வெற்றிப் படங்கள்: யாராலும் முறியடிக்க முடியாத மோகனின் சாதனை | பிளாஷ்பேக்: சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட முதல் தென்னிந்திய படம் | ரஜினியின் 173வது படத்தை இயக்கப் போவது யார்? |
விஜயுடன் 'லவ்டுடே', அஜித்துடன் 'ரெட்டை ஜடை வயது' மற்றும் 'பிரியம், கண்ணன் வருவான், கங்காகவுரி' போன்ற படங்களில் நடித்த மந்த்ரா, இப்போது நிஜ வாழ்க்கையிலும், சினிமாவிலும் அம்மாவாகிவிட்டார். இப்போது தமிழில் சற்றே இடைவெளிக்கு பின் 'உசுரே' என்ற படத்தில் அம்மாவாக நடிக்கிறார். நிஜத்தில் ஒரு பெண் குழந்தைக்கு அம்மாவாக இருக்கிறார். ஐதாராபாத்தில் வசிக்கிறார்.
இந்த படத்தில் அவரது மகளாக நடிப்பவர் பிக்பாஸ் ஜனனி. சென்னையில் நடந்த விழாவில் மந்த்ரா பேசுகையில், ''நான் ரீ என்ட்ரி ஆகி இருக்கிறேன். நல்ல கதைக்காக தமிழில் காத்திருந்தேன். இந்த படத்தில் அம்மாவாக நடித்தாலும், என் கேரக்டரில் நிறைய புதுமைகள் இருக்கும். என் மகளாக நடித்த ஜனனி, படத்திலும், நிஜத்திலும் கொஞ்சமான வார்த்தைகளைதான் பேசுகிறார். ஒரு படத்துக்கு தயாரிப்பாளர், இயக்குனர், கேமராமேன், இசையமைப்பாளர் முக்கியம். இவர்கள்தான் படத்தின் நான்கு துாண்கள். இந்த துாண்கள் நன்றாக இருந்தால் அந்த படம் நன்றாக அமையும்.
நல்ல கதைக்காக நான் காத்திருந்தபோது உசுரே படத்தின் கதை வந்தது. கேட்டவுடன் பிடித்தது. சிங்கிள் மதராக இருந்து கொண்டு ஒரு பெண்ணை உயிராக வளர்க்ககூடிய அம்மா கேரக்டர். என்றாலும் அவருக்குள்ளும் நிறைய முகங்கள் இருக்கும்.
இன்றைக்கு நிறை பேர் அம்மா கேரக்டர் செய்கிறார்கள். ஆனால் என்னை பொருத்தவரை ஒரு நாள் நடிக்கிற கேரக்டராக இருந்தாலும் வலுவாக இருக்க வேண்டும். ஏதோ வந்தோம், போனோம் அம்மாவாக பின்னாடி நின்றோம் என்று இருக்ககூடாது காத்திருந்து இந்த படத்தில் நடித்திருக்கிறேன்.'' என்றார்.
மந்த்ராவுக்கு தெலுங்கில் ராசி என பெயர். தமிழில் ஓரளவு கிளாமராக நடித்தவர் அங்கே படு ஹோம்லியாக நடித்தார். இப்போதும் பல தெலுங்கு சீரியல்களில் மந்த்ரா நடித்து வருகிறார்.