ஆக் ஷன் ஹீரோக்கள் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : கஜோல் | 'கேம் சேஞ்ஜர்' படத்துக்கு பச்சைக்கொடி காட்டியிருக்க கூடாது: தயாரிப்பாளர் தில் ராஜூ புலம்பல் | தமிழ்த் தலைப்புகளும், ஆங்கிலத் தலைப்புகளும் மோதும் ஜுன் 27 ரிலீஸ் | மாலத்தீவில் குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய காஜல் அகர்வால் | மீண்டும் வெளியாகும் 'சேது' | அன்னை இல்ல வழக்கு தள்ளுபடி: சிவாஜி குடும்பம் நிம்மதி | வடிவேலு வழக்கில், சிங்கமுத்துவுக்கு 2500 ரூபாய் அபராதம் | சின்மயி கணவர் இயக்குனர், நடிகர் ராகுல் பிறந்தநாள் : ரஷ்மிகா வாழ்த்து | பிளாஷ்பேக்: நோயை ஜெயித்து, காதலில் தோற்ற விஜி | இளையராஜா பாணியை பின்பற்றும் கோவிந்த் வசந்தா |
10 வருடங்களாக சினிமாவில் அங்கீகாரத்திற்காக போராடி வந்த விக்ரமிற்கு மிகப்பெரிய அடையாளமான படம் 'சேது', பாலா இயக்கிய முதல் படம். சிவகுமார், அபிதா, ஸ்ரீமன், ஜோதிலட்சுமி, மனோபாலா, மோகன் வைத்யா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஆர்.ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய, இளையராஜா இசை அமைத்தார். ஸர்மதா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஏ.கந்தசாமி தயாரித்தார்.
சினிமா விமர்சகர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்களுக்கு 50 முறைக்கு மேல் திரையிட்டுக்காட்டப்பட்டு அவர்களால் புறக்கணிக்கப்பட்ட படத்தை மக்கள் கொண்டாடினார்கள். பின்னர் பல்வேறு மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. தேசிய விருது உள்பட பல்வேறு விருதுகளை வென்றது. தமிழ் சினிமாவின் டிரெண்ட் செட் படங்களில் ஒன்றாக அமைந்தது.
படம் வெளியாகி வெள்ளி விழா ஆண்டு நிறைவடைந்ததை தொடர்ந்து தற்போது படத்தை மறு வெளியீடு செய்கிறார்கள். தற்போது இப்படத்தை அதிநவீன தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகிறது. விரைவில் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட இருக்கிறது.