ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு |

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தவர் ஐஸ்வர்யா. தற்போது சின்னத்திரை நிகழ்ச்சிகள் மற்றும் மேடை நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார். கேப்டன் மில்லர், சமீபத்தில் வெளியான டிஎன்ஏ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். தற்போது அவர் 'மாயக்கூத்து' என்ற சுயாதீன படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.
ராகுல் மூவி மேக்கர்ஸ் மற்றும் அபிமன்யு கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஏ.ஆர்.ராகவேந்திரா எழுதி இயக்கியுள்ளார். இவர் புகழ்பெற்ற "உடன்பால்" படத்தின் கதாசிரியர். இப்படத்தில் டெல்லி கணேஷ், மு ராமசாமி மற்றும் சாய் தீனா, நாகராஜன், பிரகதீஸ்வரன், முருகன், காயத்ரி மற்றும் ரேகா நடித்திருக்கின்றனர். சுந்தர் ராம் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அஞ்சனா ராஜகோபாலன் இப்படத்திற்கு இசையமைப்பாளராக பணியாற்றி உள்ளார்.
படம் பற்றி இயக்குனர் கூறும்போது, "சமூகத்தில் படைப்பாளிகளின் பொறுப்புணர்வை சுட்டிக்காட்டும் இப்படம் ஒரு கற்பனை கலந்த திரில்லர் வடிவில் உருவாகியுள்ளது. மேலும், இப்படம் சீரான பொருட்செலவில் நேர்த்தியாகவும் தரமாகவும் படைக்கப்பட்டுள்ளது. படத்தின் அனைத்து தயாரிப்பு வேலைகளும் முடிந்து, இப்போது வெளியீட்டுக்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன" என்றார்.




