நடிகையின் ஆசையை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின் | அனுஷ்காவின் ‛காட்டி' டிரைலர் வெளியீடு : ரிலீஸ் தேதியும் அறிவிப்பு | ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் |
பாலிவுட் இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் ஆரம்பித்து வைத்த 'ஜூராசிக் பார்க்' படம் உலகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சினிமாவை தாண்டி டைனோசர்கள் பற்றிய ஆய்வை பல நாடுகள் முன்னிலும் வேகமாக செயல்படத் தொடங்கியது.
லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு சக்திமிக்க விலங்காக வாழ்ந்து பின்னர் மறைந்த டைனோசர்கள் பற்றிய கற்பனை கதைகள் ஏராளமான வெளிவந்தது. ஜூராசிக் பார்க், ஜூராசிக் வேர்ல்ட் என்ற தலைப்புகளில் பல திரைப்படங்கள் வெளிவந்தது. பல வெப் தொடர்களும் தயாரானது. இதுதவிர வீடியோ கேம்கள், கார்டூன் படங்கள், அனிமேஷன் படங்களும் வெளிவந்தது.
இவற்றில் பெரும்பாலான கதைகள் டைனோசர்கள் கொடூர மிருகமாகவும், அவற்றை அழிக்க மனிதர்கள் போராடுவது மாதிரியாகத்தான் இருந்தது. ஆனால் தற்போது வெளிவர இருக்கும் 'ஜூராசிக் பார்க்: ரீ பார்ன்' படம் இதற்கு முற்றிலும் மாறான ஒரு கதையுடன் வருகிறது.
இந்த படத்தின் கதை ஜுராசிக் வேர்ல்ட் டொமினியனுக்குப் பிறகு வருகிறது. தனித்தீவில் மனிதர்களால் வேட்டையாடப்பட்ட டைனோசர்கள் தவிர தப்பித்த சில டைனோசர்கள் தங்கள் இனத்தை பெருக்கி அமைதியாக வாழ்ந்து வருகிறது. இந்த டைனோசர் கூட்டத்திற்கு 3 முக்கிய டைனோசர்கள் தலைவர்களாக இருந்து வழி நடத்துகிறது.
அழிக்கப்பட்ட டைனோசர்கள் இனம் எப்படி பிழைத்து இனத்தை பெருக்கியது என்பதை கண்டறிய ஒரு ஆய்வு நடத்தப்படுகிறது. இந்த ஆய்வில் தலைமை பொறுப்பில் இருக்கும் 3 டைனோசர்களின் உடலில் அற்புதமான ஒரு மருத்துவ சக்தி இருக்கிறது. அதைக் கொண்டு மனிதர்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ முடியும் என்பதை கண்டுபிடிக்கிறார்கள்.
அதை கண்டுபிடித்து உலகத்தையே தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஒரு வில்லன் கூட்டமும், டைனோசர்களோடு அன்பாக பழகி அந்த சக்தியை வாங்க ஒரு குழுவும் செல்கிறது. இந்த பயணத்தில் ஒரு குடும்பம் டைனோசர் கூட்டத்திற்குள்ளும் மாட்டிக் கொள்கிறது. இந்த பிரச்னைகள் எப்படி தீர்கிறது, டைனோசர் சக்தி யாருக்கு கிடைத்தது? என்பதுதான் படத்தின் கதை.
பிரம்மாண்டமான காட்சிகள் மற்றும் கதைக்களம் என இந்த ஆண்டின் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இது உள்ளது. எம்மி விருது வென்ற கரேத் எட்வர்ட்ஸ் இயக்கியுள்ள இந்த படத்தில் ஸ்கார்லெட் ஜோஹன்சன், ஜொனாதன் பெய்லி, மஹெர்ஷாலா அலி மற்றும் லூனா பிளேஸ் மற்றும் ரூபர்ட் ப்ரெண்ட் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். வரும் ஜூலை 4 அன்று வெளியாகிறது.