ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் | காஞ்சனா 4 படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது | மீண்டும் தெலுங்கு படத்தில் யோகி பாபு | ராமாயணா படத்தில் சாய் பல்லவியின் சம்பளம் எவ்வளவு? | மே 18ல் ராம்சரணின் 'பெத்தி' டிரைலர் வெளியீடு | ஏமாற்றம் தந்த ஏப்ரல் மாதம் | 'எல்ஐகே' 200 கோடி வசூலிக்கும் என எதிர்பார்த்தேன் : விக்னேஷ் சிவன் ஆதங்கம் | மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' |

தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிக்க சேகர் கம்முலா இயக்கத்தில் நேற்று பான் இந்தியா படமாக வெளியானது 'குபேரா'. இப்படத்தின் முதல் நாள் வசூல் 20 கோடியைக் கடந்திருக்கலாம் என டோலிவுட் வட்டார பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பட வெளியீட்டிற்கு முன்பு ஆன்லைன் முன்பதிவில் தெலுங்கை விடவும் தமிழில் முன்பதிவு மிகவும் பின்தங்கி இருந்தது. படம் வெளியான பின் பாசிட்டிவ்வான விமர்சனங்கள் நிறைய வருவதால் தற்போது தமிழிலும் முன்பதிவு உயர்ந்துள்ளதாக தியேட்டர் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
சுமார் 100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் இப்படம் உருவாகியுள்ளதாகச் சொல்கிறார்கள். படத்திற்கான தியேட்டர் உரிமை வியாபாரம் மட்டும் 70 கோடி வரை நடந்துள்ளதாகத் தகவல். மொத்தமாக சுமார் 130 கோடி வசூலித்தால் ஹிட் பட வரிசையில் இந்தப் படம் இடம் பெற வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
இன்றும் நாளையும் வசூல் உயர்ந்தால் தான் அடுத்த வார நாட்களில் இப்படத்திற்கான வசூலும் குறிப்பிடும்படி இருக்கும்.




