பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் | கரூர் சம்பவம்: காந்தாரா நிகழ்ச்சி ரத்து | சாப்பாட்டுக்கு முக்கியத்துவம் தரும் தனுஷ்: அருண் விஜய் புகழாரம் | 7 வருடங்களுக்கு பிறகு கதை நாயகியாக நடிக்கும் ஆஸ்னா |
தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள 'குபேரா' படம் நாளை பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. இப்படம் தமிழிலும் படமாக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் தமிழ் ரசிகர்களிடம் எழுந்துள்ளது. அதனால், தனுஷின் படங்களுக்கு உள்ள வழக்கமான ஆன்லைன் முன்பதிவு கூட இந்தப் படத்திற்கு இல்லை. முதல் நாள் முதல் காட்சிகள் கூட பெரும்பாலும் ஹவுஸ்புல் ஆகவில்லை.
ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் உருவாகும் படம் என்றாலே ரசிகர்களுக்கு சந்தேகம் வந்துவிடுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பும் தமிழகத்தில் நடைபெறவேயில்லை என்றே சொல்கிறார்கள்.
இதனிடையே, சமீபத்திய பேட்டி ஒன்றில் சேகர் கம்முலா, “என்னுடைய முதலாவது பான் இந்தியா படம். பல சவால்களை நான் சந்திக்க வேண்டி இருந்தது. தெலுங்கு, தமிழில் தனித்தனியாக படமாக்கினோம். அப்போதுதான் 'லிப் சின்க்' சரியாக இருக்கும். ஒரே சமயத்தில் இரண்டு படங்களைப் படமாக்குவதற்கு இது சமம். அதனால், படமாக்க நேரம் எடுக்கும். படப்பிடிப்புக்குப் பிந்தைய வேலைகள் பான் இந்தியா படம் என்றால் மொத்தமாக வேறு ஒரு தளத்தில் இருக்கும். ஒவ்வொரு பாடல், வசனம் என அனைத்துமே அனைத்து மொழிகளிலும் சரி பார்க்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இயக்குனரே இது தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவான படம் என்று சொல்லிவிட்டார். படத்தைப் பார்த்த பிறகு ரசிகர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் என்று காத்திருப்போம்.