ஆகஸ்ட் 3 முதல் மலையாள பிக்பாஸ் சீசன்-7 துவக்கம் | போட்டியின்றி இணைச் செயலாளராக தேர்வான் ‛திரிஷ்யம்' நடிகை | 36 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி படத்திற்கு 'ஏ' சான்றிதழ் | இரண்டாவது முறை தேசிய விருது பெறும் ஊர்வசி | தேசிய விருது வென்றவர்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து | வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது |
'கரகாட்டக்காரன்' படத்தில் காமெடி மூலம் புகழ் பெற்றவர் சொப்பன சுந்தரி. திரையில் தோன்றாத அந்த கேரக்டரை இன்று வரை பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் யார் சொப்பன சுந்தரி தெரியுமா? நடிகை அஞ்சலி தேவி.
1950ம் ஆண்டு வெளியான தெலுங்கு படம் 'சொப்பன சுந்தரி' பிரதிபா புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ் கன்டசாலா பலராமையா தயாரித்து, இயக்கினார். இதில் அக்கினேனி நாகேஸ்வர ராவ் மற்றும் அஞ்சலி தேவி நடித்திருந்தனர். சி.ஆர்.சுப்புராமன் மற்றும் கன்டாசாலா இணைந்து இசையமைத்திருந்தார்கள்.
ஒரு நாட்டின் இளவரசனின் கனவில் அடிக்கடி ஒரு அழகான பெண் வந்து செல்கிறாள். கனவிலேயே அவளை காதலிக்கும் இளவரசன் அவளை தேடி உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்கிறான். இறுதியாக அவளை கண்டுபிடிக்கிறான், காதலிக்கிறான் திருமணம் செய்யப் போகும்போது தான் தெரிகிறது அவள் வான லோகத்து தேவதை என்று.
வானலோகச் சட்டப்படி தேவதை ஒரு மனிதனை திருமணம் செய்ய முடியாது என்பதால் சிக்கல் வருகிறது. இதையும் மீறி இருவர் திருமணம் எப்படி நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை. இளவரசனின் சொப்பனத்தில் வந்த சுந்தரி என்பதால் படத்தின் டைட்டில் 'சொப்பன சுந்தரி' என்று வைக்கப்பட்டது. இளவரசனாக நாகேஸ்வரராவும், சொப்பன சுந்தரியாக அஞ்சலிதேவியும் நடித்தனர். பின்னர் இந்த படம் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது.