ஆட்டுக்கார அலமேலு, கல்யாணராமன், சுல்தான் : ஞாயிறு திரைப்படங்கள் | விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் |
அந்தக் காலத்தில் நடிகையான சிலர் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்பு ஹீரோயின் ஆனார்கள். அப்படி அவர்கள் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும்போது சிறுவனாக நடித்தது உண்டு. ஆனால் ஹீரோயின் ஆகும் வயதில் ஆணாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் விஜய நிர்மலா.
ஆந்திராவை சேர்ந்த அவர் சென்னை, நசரத்பேட்டையில்தான் பிறந்து வளர்ந்தார். முறைப்படி நடனம் கற்று நடிப்பு வாய்ப்பு தேடியபோது அவருக்கு முதன் முதலாக அமைந்த படம் 'மச்சரேகை'. இந்த படத்தில் கதையின் நாயகனாக அதாவது மச்ச ராஜாவாக டி.ஆர்.மகாலிங்கம் நடித்தார். அவரது இளமை பருவ காட்சிகளில், அதாவது இளம் மச்ச ராஜாவாக நடித்தவர் விஜய நிர்மலா. ஒரு சில காட்சிகளில் மட்டும் நடிக்காமல் சுமார் 30 நிமிட காட்சிகளில் அவர் மச்ச ராஜாவாக நடித்தார்.
மச்சராஜா ஜோடியாக முதலில் அஞ்சலிதேவி நடித்தார். பின்னர் என்ன காரணத்தாலோ அவர் விலகிக் கொள்ள அந்த கேரக்டரில் எஸ்.வரலட்சுமி நடித்தார். 'மச்சரேகை' என்பது தஞ்சை ராமய்யாதாஸ் எழுதி நடத்தி வந்த ஒரு நாடகம். இந்த நாடகத்தை பார்த்த டி.ஆர்.மகாலிங்கம் அதனை திரைப்படமாக்க விரும்பினார். அவரே தயாரித்து, நடித்தார். அவருடன் பி.ஆர்.பந்தலு, குமாரி கமலா, சி.டி.ராஜலட்சுமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பி.புல்லையா இயக்கினார், சி.ஆர்.சுப்பாராமன் இசை அமைத்திருந்தார். 1950ம் ஆண்டு படம் வெளியானது.
விஜய நிர்மலா பிற்காலத்தில் 100க்கும் மேற்பட்ட தென்னிந்திய மொழி படங்களில் நடித்தார். 40க்கும் மேற்பட்ட படங்களை இயக்கினார்.