விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் இந்த மாதம் 20ம் தேதி வெளியாக உள்ள படம் 'குபேரா'. இப்படத்திற்கான வெளியீட்டுத் தேதியை படத்தை வாங்கிய ஓடிடி நிறுவனம்தான் முடிவு செய்துள்ளது.
இது குறித்து படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுனில் நரங் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். படத்தை முதலில் ஜுலை மாதம்தான் வெளியிடுவதாக இருந்தார்களாம். ஆனால், படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிய நிறுவனம் ஜுன் மாதம் 20ம் தேதி படத்தை வெளியிடச் சொன்னார்களாம். அப்படி இல்லாமல் தாமதமாக வெளியிட்டால் அவர்கள் கொடுக்க வேண்டிய தொகையில் 10 கோடியை குறைத்துக் கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்கள்.
இது பற்றி பேசும் போது சற்றே கோபமாகப் பேசியுள்ளார் தயாரிப்பாளர் சுனில் நரங். முன்னணி நடிகர்களின் படங்களின் வெளியீட்டை ஓடிடி நிறுவனங்கள் முடிவு செய்கிறது என சமீப காலமாக ஒரு பேச்சு இருந்து வந்தது. அது உண்மைதான் என்பதை தயாரிப்பாளர் சுனிலின் பேட்டி நிரூபித்துள்ளது.