டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

தெலுங்குத் திரையுலக இயக்குனராக இருந்தாலும் பான் இந்தியா இயக்குனராக அடையாளத்தை ஆரம்பித்து வைத்தவர் ராஜமவுலி. 'ஆர்ஆர்ஆர்' படத்திற்குப் பிறகு மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ரா நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். மகேஷ்பாபுவின் 29வது படமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி நடந்து வருகிறது. தற்போது படப்பிடிப்புக்கு சற்று இடைவெளி விட்டுள்ளார்கள்.
இந்தப் படத்தில் தமிழ் நடிகர் விக்ரம் வில்லனாக நடிக்க உள்ளார் என கடந்த சில மாதங்களாகவே தகல்கள் வெளியாகி வந்தன. ஆனால், அது எதுவுமே உறுதிப்படுத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் வில்லனாக நடிக்க தற்போதைய சூழலில் விருப்பமில்லை என விக்ரம் மறுத்துவிட்டாராம். அதனால், அவருக்குப் பதிலாக வேறொரு நடிகருடன் பேச்சு வார்த்தையை ஆரம்பித்துள்ளதாகத் தெரிகிறது. மாதவன் உள்ளிட்ட சில நடிகர்கள் அந்தப் பட்டியலில் இருக்கிறார்களாம். வலுவான ஒரு கதாபாத்திரம் என்பதால் அதற்கான தேர்வு கொஞ்சம் தாமதமாக நடந்து வருவதாகவும் சொல்கிறார்கள்.