'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தமிழ் சினிமாவில் மதமாற்றம், அதன் பின்னணி, அதனால் ஏற்படும் பாதிப்புகளை பற்றிய கதைகள் வெகு குறைவு. தமிழகத்தில் இப்படிப்பட்ட படங்களுக்கு எதிர்ப்பு வரும். அரசின் கோபத்தை சம்பாதிக்க நேரிடும், பல அமைப்புகள் கொடி பிடிக்கும் என்பதால் அதை கையில் எடுக்க பலர் தயங்கினார்கள். ஆனால், இசக்கி கார்வண்ணன் இந்த பிரச்னையை மையமாக வைத்து பரமசிவன் பாத்திமா படத்தை எடுத்து இருக்கிறார்.
பரமசிவனாக நடிகர் விமலும், கிறிஸ்துவ மதத்துக்கு மாறிய குடும்பத்தை சேர்ந்த பாத்திமாவாக சாயாதேவியும் நடித்து இருக்கிறார்கள். இவர்கள் கொல்லப்பட, ஆவியாகி என்ன செய்கிறார்கள் என்பது கதை. பாத்திமா தந்தையாக நடித்த இயக்குனர் மனோஜ்குமார் ஆசிரியர் வேலைக்கு ஆசைப்பட்டு மதம் மாறுகிறார். திருச்சபை செல்கிறார். ஆனால், மேளச்சத்தம் கேட்டால், வெள்ளி செவ்வாய் என்ற பழசை மறக்க முடியாமல் வீட்டில் நான் சுடலை வந்து இருக்கேன் என்று சாமி ஆடுகிற காட்சியும் படத்தில் இடம் பிடித்துள்ளது.
மத மாற்றம் சம்பந்தப்பட்ட பல வசனங்களும் இடம் பிடித்துள்ளது. பல வசனங்கள் சென்சாரால் நீக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு சேரன் நடித்த, ஜாதி கொடுமையை சொல்லும் தமிழ்குடிமகன் படத்தை இயக்கியவர் இசக்கி கார்வண்ணன்.