வீர தீர சூரன் படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது | உயிரை காத்த ஆட்டோ ஓட்டுநரை சந்தித்து கவுரவித்த சைப் அலிகான் | மாதவன் பயந்த இரண்டு விஷயங்கள் | ஜெயிலர் 2 : சிவராஜ்குமாருக்கு பதில் பாலகிருஷ்ணா | சுந்தர்.சி யின் வல்லான் டீசர் வெளியீடு | யஷ் படக்குழுவிற்கு கர்நாடக வனத்துறை நோட்டீஸ் | விமான நிலையத்தில் வீல் சேரில் அமர்ந்து வந்த ராஷ்மிகா | மீண்டும் விஷால் - சுந்தர் சி கூட்டணி? | 'புஷ்பா' இயக்குனர் வீட்டில் வருமான வரி சோதனை | எனை நோக்கி பாயும் தோட்டா என் படமே அல்ல : அதிர்ச்சி கொடுத்த கவுதம் மேனன் |
நடிகை சாயாதேவி. 'கன்னி மாடம்' படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு கழுவேத்தி மூக்கன் படத்தில் நடித்தார். கடைசியாக 'சார்' படத்தில் விமல் ஜோடியாக நடித்தார். தற்போது அவர் 'பரமசிவன் பாத்திமா' என்ற படத்தில் மீண்டும் விமல் ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தை லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரித்து, இயக்குகிறார். இவர் ஏற்கெனவே சேரன் நடித்த 'தமிழ்க்குடிமகன்' படத்தை இயக்கி இருந்தார். இப்படத்த்தில் விமல், சாயாதேவி தவிர எம்.எஸ்.பாஸ்கர், மனோஜ் குமார், ஸ்ரீ ரஞ்சனி, ஆதிரா, அருள்தாஸ், கூல் சுரேஷ், காதல் சுகுமார், வீரசமர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மைனா சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, தீபன் சக்கரவர்த்தி இசை அமைக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் இசக்கி கார்வண்ணன் கூறும்போது “மலை கிராமத்தில் வசிக்கும் இரு வேறு நம்பிக்கைகளை சார்ந்த மக்களின் வாழ்க்கையை மதங்களின் கொள்கைகளும் கோட்பாடுகளும் எவ்வாறு பாதிக்கின்றன என்பதை பாசாங்கின்றி சுவாரசியத்துடன் விவரிக்கும் படம்” என்றார்.