'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
காதலிக்கும்போது காதலனும், காதலியும் தங்கள் செல்போனை மாற்றிக் கொண்டால் என்ன நடக்கும் என்பதை கதை கருவாக கொண்டு உருவான படம் 'லவ் டுடே'. பெரிய வெற்றி பெற்ற படம். இதேபோன்று திருமணத்திற்கு பிறகு புதுமண தம்பதிகள் தங்கள் செல்போனை மாற்றிக் கொண்டால் என்ன நடக்கும் என்பதை கதை கருவாக கொண்டு உருவாகி உள்ள படம் 'ரிங் ரிங்'. “போனின்றி அமையாது உலகு” என்கிற டேக் லைனுடன் வெளியாகிறது.
இப்படத்தை தியா ஸ்ரீ கிரியேஷன்ஸ் மற்றும் ரூல் பிரேக்கர்ஸ் புரொடக்சன் சார்பில் ஜெகன் நாராயணன், சக்திவேல் தயாரித்துள்ளனர். விவேக் பிரசன்னா, சாக்ஷி அகர்வால், டேனியல் அன்னி போப், பிரவீன், அர்ஜுனன், ஸ்வயம், சஹானா, ஜமுனா ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு பிரசாத், இசை வசந்த் இசைப்பேட்டை.
கந்தகோட்டை, ஈகோ படங்களை இயக்கிய சக்திவேல் இயக்கி உள்ளார். படம் பற்றி அவர் கூறியதாவது: 'நீரின்றி அமையாது உலகு' என்றார் வள்ளுவர். இந்தக் காலத்தில் 'மொபைல் போன் இன்றி அமையாது உலகு' என்ற நிலை உள்ளது. அந்த அளவிற்கு மொபைல் போன் நம்முடைய வாழ்க்கையில் இரண்டறக் கலந்து விட்டது. இன்றைய வாழ்க்கையில் மொபைல் போன் நமது இன்ப துன்பங்களில், கஷ்ட நஷ்டங்களில் பங்கெடுத்து வருகிறது. மனித உறவில் பல்வேறு சிக்கல்களுக்கும் பிரச்னைகளுக்கும் காரணமாகவும் அது உள்ளது. மொபைல் போன் என்பது இன்று மனிதர்களின் மூன்றாவது கையாக மாறிவிட்டது. அப்படி மொபைல் போனை மையமாக வைத்து 'போனின்றி அமையாது உலகு' என்கிற டேக் லைனுடன் படம் உருவாகி உள்ளது.
திருமணத்துக்குப் பிறகு நான்கு தம்பதிகள் போனை மாற்றிக் கொள்கிறார்கள். அதற்குப் பிறகு அவர்கள் வாழ்க்கையில் நிகழும் நகைச்சுவையான, சுவாரஸ்யமான, மர்மங்கள் நிறைந்த , விறுவிறுப்பான சம்பவங்களைக் கொண்டு இந்தப் படம் உருவாகி இருக்கிறது. நான்கு தம்பதிகளுக்கான பின்புலம் நான்கும் தனித்தனியாக இருக்கும். 2025 ஜனவரி 3ம் தேதி வெளிவருகிறது. என்றார்.