சசி, விஜய் ஆண்டனி படத்தலைப்பு நூறுசாமி | மினி இட்லியாக சுவைக்கப்படணும் : பார்த்திபன் ஆசை | கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வரும் குஷி ரவி | ஹீரோவான ‛பிக் பாஸ்' விக்ரமன் | ‛பறந்து போ' கிரேஸ் ஆண்டனிக்கு திருமணம் : 9 வருட காதலரை மணந்தார் | பிளாஷ்பேக் : 33 முறை மோதிய விஜயகாந்த், பிரபு படங்கள் | பிளாஷ்பேக்: முத்துராமலிங்கத் தேவர் பார்த்த ஒரே படம் | இன்று ரவிமோகன் பிறந்த நாள்: சிறப்பு போஸ்டர்கள் வெளியிட்டு வாழ்த்து | மடோனா, இவ்வளவு அழகாகப் பாடுவாரா ? | திருமணம் எப்போது? அதர்வா நச் பதில் |
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த தக் லைப் படத்தின் முதல் முன்னோட்டத்தில் என் பெயர் ரங்கராய சக்திவேல் நாயக்கர் என்று கமல் சொல்வதாக வசனம் இருந்தது. அப்போதே அந்த வசனத்துக்கு எதிர்ப்புகள் வந்தன. கமல்ஹாசன் படத்தில் இப்படி ஜாதி பெயர் இடம் பெறலாமா? ஏற்கனவே, விருமாண்டி, தேவர் மகன் போன்ற சர்ச்சையில் சிக்கியவர் மீண்டும் அதை தொடலாமா என பலர் விமர்சித்தனர். ஆனால், நேற்று வெளியான படத்தில் அந்த ஜாதிப் பெயர் இல்லை. பல வசனங்களில் ரங்கராய சக்திவேல் என்றே சொல்கிறார் கமல். எதுக்கு வம்பு என நினைத்து மணிரத்னம், கமல்ஹாசன் குழு அந்த வார்த்தையை நீக்கியதா? சென்சாரில் நீக்கப்பட்டதா என தெரியவில்லை.ஆனாலும், அந்த வார்த்தை நீக்கப்பட்டதை பலரும் வரவேற்கிறார்கள். இதற்கிடையில் முத்தமழை பாடலை படத்தில் வைக்காதது ஏன், அது தவறு என பலரும் கூறுவதால் அந்த பாடலின் வீடியோ நெட்டில் வெளியிடப்படலாம் என்று கூறப்படுகிறது.