மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

தனுசும், நயன்தாராவும் 'யாரடி நீ மோகினி' என்ற படத்தில் இணைந்து நடித்தார்கள். பின்னர் தனுஷ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிய 'நானும் ரவுடிதான்' படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார் நயன்தாரா. அந்த படத்தை இயக்கிய விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், அந்த திருமண ஆவணப்படத்தை கடந்த ஆண்டு நெட்பிளிக்ஸில் வெளியிட்டார்கள். குறிப்பாக அந்த படத்தில் நானும் ரவுடிதான் படத்தின் பாடல்களை பயன்படுத்த தனுஷ் இடத்தில் நயன்தாரா அனுமதி கேட்டபோது அவர் கொடுக்கவில்லை.
என்றாலும் அந்த படத்தின் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட காட்சிகள் அந்த ஆவணப்படத்தில் இடம் பெற்றது. அதையடுத்து அதற்கு எதிராக 10 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பினார் தனுஷ். அதற்கு எதிராக நயன்தாராவும் ஒரு அறிக்கை வெளியிட்டார். இப்படி அவர்களிடையே மோதல் ஏற்பட்ட நிலையில், அந்த வழக்கும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் 'குபேரா' படத்தின் ஆடியோ விழாவில், யாரையோ டார்க்கெட்டாக வைத்து பேசினார் தனுஷ். அவர் பேசும்போது, ''என்னைப் பற்றி சிலர் திட்டமிட்டு வதந்தி பரப்புகிறார்கள். என்ன வேண்டுமானாலும் நெகட்டிவிட்டியா பரப்புங்கள். ஒவ்வொரு தடவையும் என் படத்தின் ரிலீஸுக்கு ஒன்றரை மாசத்துக்கு முன்னாடி நெகட்டிவிட்டி பரப்புங்க. ஆனால் என் ரசிகர்கள் தீபந்தமாக இருக்கும் வரை நான் போய்க்கொண்டே இருப்பேன்.
தம்பிகளா கொஞ்சம் தள்ளி போய் விளையாடுங்க ராஜா. இந்த மாதிரி சர்க்கஸ் எல்லாம் என்கிட்ட வேணாம். என்னுடைய வழித்துணையா என் ரசிகர்கள் இருக்கும்போது நீங்க சும்மா நான்கு வதந்தியை பரப்பி விட்டு என்னை காலி பண்ணிடலாம்னு நினைச்சா அதைவிட முட்டாள்தனம் எதுவும் கிடையாது. உங்களால் ஒரு செங்கலை கூட ஆட்ட முடியாது. எண்ணம் போல் தான் வாழ்க்கை'' என்று பேசினார் தனுஷ். அவர் நயன்தாராவின் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும், அவரை மனதில் வைத்துதான் இப்படி பேசி உள்ளார் என்று பலரும் கருத்து கூறி வருகிறார்கள்.