மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
அமரன் படத்தின் வெற்றிக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் மதராஸி மற்றும் சுதா கெங்கரா இயக்கும் பராசக்தி என்ற இரண்டு படங்களில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இதில், மதராஸி படப்பிடிப்பு நடைபெற்று வந்தபோது, சல்மான்கான் நடித்த சிக்கந்தர் படத்தை இயக்க முருகதாஸ் சென்று விட்டதால், அப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தபோதே, சுதா கெங்கரா இயக்கும் பராசக்தி படத்திலும் நடிக்க தொடங்கினார் சிவகார்த்திகேயன்.
இந்த நிலையில் தற்போது பராசக்தி தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கர் அமலாக்கத்துறை விசாரணையில் சிக்கி இருப்பதால் அப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், மதராஸி படத்தில் மீண்டும் நடிக்கத் தொடங்கினார் சிவகார்த்திகேயன். அப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது. அடுத்து இறுதிக்கட்ட படப்பிடிப்பை தொடங்கப் போகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி மதராஸி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள் .