அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
ஆந்திர துணை முதல்வரான பவன்கல்யாண் நடிக்கும் ஹரிஹர வீரமல்லு, தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஜூன் 12ல் வெளியாகிறது. முதலில் இந்த படத்தை கிரிஷ் இயக்கினார். பல பிரச்னைகளால் படப்பிடிப்பு இழுக்க, மீதி படத்தை தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் மகனான ஜோதி கிருஷ்ணா முடித்தார். இந்த படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற கீரவாணி இசையமைத்து இருக்கிறார். இதில் ஹீரோவான பவன் கல்யாண் 'கேட்கணும் குருவே' என்ற தமிழ் பாடலை தனது சொந்த குரலில் பாடியிருக்கிறார்.
தெலுங்கில் இப்போது அதிகமாக தத்துவ பாடல் வருவது இல்லை. பவன்கல்யாண் அரசியலிலும் இருப்பதால் இந்தவகையில் தத்துவ பாடலை அவர் பாடியிருக்கிறார். தவிர, குடிக்கு ஆதரவான சில வசனங்களை அவர் பேச மறுத்துவிட்டாராம். நான் துணை முதல்வராக இருப்பதால் அப்படி பேச முடியாது என மறுத்ததுடன், ஒரு பாடல் காட்சியிலும் சில சர்ச்சை வரிகளை நீக்க சொல்லியிருக்கிறாராம். முகலாய மன்னர் அவுரங்க சீப்பை எதிர்த்து போராடுகிற அல்லது அவர் ஆதரவாளர்களிடம் இருந்து ஒரு விஷயத்தை பாதுகாக்கிற கேரக்டரில் நடிக்கிறாராம். ஐதராபாத், சென்னையை தொடர்ந்து இந்த படத்தில் அடுத்த கட்ட நிகழ்ச்சி விரைவில் திருப்பதியில் நடக்க உள்ளது. அதில் பவன்கல்யாண் கலந்து கொண்டு படம் குறித்து பேச உள்ளாராம்.