ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
இயக்குனர், நடிகர், தயாரிப்பாளரான சுந்தர்.சிக்கு இந்த ஆண்டு முக்கியமான ஆண்டு. அவர் சினிமாவில் அடியெடுத்து வைத்து 30 ஆண்டுகள் ஆகிவி்ட்டது. திருமண வாழ்க்கையில் 25 ஆண்டை எட்டியிருக்கிறார். 'அரண்மனை 4, மதகஜராஜா, கேங்கர்ஸ்' என வரிசையாக 3 வெற்றி படங்களை கொடுத்து இருக்கிறார். இப்போது தனது சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய பட்ஜெட்டில் நயன்தாராவை வைத்து 'மூக்குத்தி அம்மன் 2'வை இயக்கி வருகிறார். அவர் மூத்த மகள் சினிமாவில் நடிக்க தயாராகி வருகிறார்.
இளைய மகள் சினிமா தயாரிப்பு நிர்வாகி ஆகிவிட்டார். இதனால், அவருடைய நண்பர்கள், நெருக்கமான சினிமாகாரர்கள் 'எப்போ பார்ட்டி வைக்கப்போறீங்க. இந்த ஆண்டு உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத ஆண்டு. எங்கே வரணும்' என்று நச்சரிக்கிறார்களாம். அவரோ, தலைக்கு மேல் வேலை இருக்கிறது என்று எஸ்கேப் ஆகிறாராம்.