'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
மலையாள திரையுலகில் குறிப்பிடத்தக்க வில்லன் நடிகராக வலம் வருபவர் நடிகர் ஷைன் டாம் சாக்கோ. சமீபகாலமாக தமிழ் மற்றும் தெலுங்கிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். கடந்த 10 வருடங்களுக்கு முன்பே இவர் படப்பிடிப்பில் போதைப்பொருள் பயன்படுத்தினார் என கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுதலை ஆனார். இந்த நிலையில் மீண்டும் படப்பிடிப்பில் அவர் போதை பொருள் பயன்படுத்தியதாக அவருடன் ஜோடியாக நடித்த நடிகை ஒருவர் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
இன்னொரு பக்கம் சமீபத்தில் கோழிக்கோடு பகுதியில் போதைப் பொருள் கடத்தி கைதான நபர்கள் அளித்த வாக்குமூலத்தில் ஷைன் டாம் சாக்கோ மற்றும் இன்னொரு நடிகரான ஸ்ரீநாத் பாஷி இருவருக்கும் தாங்கள் போதைப்பொருள் சப்ளை செய்து வருவதாக வாக்குமூலத்தில் கூறினார்கள். இதனைத் தொடர்ந்து ஷைன் டாம் சாக்கோவை போலீசார் கைது செய்து காவலில் எடுத்து விசாரித்தனர். அதன்பிறகு ஜாமினில் அவர் விடுதலை செய்யப்பட்டாலும் கூட போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டார். தற்போது அங்கே சிகிச்சை பெற்று வரும் ஷைன் டாம் சாக்கோ, சமீபத்தில் ஒரு யுடியூப் சேனல் ஒன்றில் மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார்,
இதில் அவர் கூறும்போது, “யாரையும் நம்பக்கூடாது என என் பெற்றோர் கூறுவார்கள். ஆனால் நான் நம்பிக்கையை தான் முக்கியமாக கருதினேன். அதன் மூலம் இந்த போதை பொருள் பழக்கமும் சேர்ந்து கொண்டது. பத்து வருடங்களுக்கு முன்பு இதேபோன்று போதைப் பொருள் பயன்படுத்திய போது அந்த சமயத்தில் என் பெற்றோர்கள் ரொம்பவே பாதிக்கப்பட்டனர்.. எர்ணாகுளம் போலீஸ் ஸ்டேஷனில் என்னை பார்த்து என் தந்தை முதன்முதலாக கதறி அழுதது இப்போதும் ஞாபகத்தில் இருக்கிறது.
வெளிநாட்டில் வசிக்கும் என் தங்கைக்கு கூட எனது செயலால் கெட்ட பெயர் ஏற்பட்டது. அதேசமயம் போதைப்பொருள் நான் பயன்படுத்தினாலும் கூட அதன் மூலம் யாரையும் துன்பப்படுத்தியதில்லை. என்னை, என் உடலை, என் மனதை மற்றும் என் குடும்பத்தை வேண்டுமானால் நான் துன்புறுத்தி இருக்கிறேன் என ஒப்புக்கொள்வேன். எனக்காக இந்த பழக்கத்தை விட வேண்டும் என்றால் கூட யோசித்து இருப்பேன். ஆனால் என் குடும்பத்தார் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்ற இந்த பழக்கத்தை அடியோடு கைவிட போகிறேன்” என்று கூறியுள்ளார்.