மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
கடந்த சில நாட்களாகவே பரபரப்பான செய்திகளில் இடம்பிடித்து வருகிறார் மலையாள வில்லன் நடிகரான ஷைன் டாம் சாக்கோ. இவர் தமிழில் 'பீஸ்ட், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்', சமீபத்தில் வெளியான 'குட் பேட் அக்லி' ஆகிய படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் கேரளாவில் பிடிபட்ட போதை மருந்து கும்பல் ஒன்று இவருக்கு ரெகுலராக போதைப்பொருள் சப்ளை செய்ததாக கூறியதை தொடர்ந்து கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்தார். இன்னொரு பக்கம் 'சூத்ரவாக்கியம்' என்கிற படத்தில் நடித்தபோது அந்த படத்தின் கதாநாயகி வின்சி அலோசியஸ் என்பவர் ஷைன் டாம் சாக்கோ போதை மருந்து உட்கொண்டு தன்னிடம் தவறான முறையில் அத்துமீறியதாக நடிகர் சங்கத்தில் புகார் அளித்தார்.
இதைத்தொடர்ந்து உள்புகார் குழு நடத்திய விசாரணையின் போது சம்பந்தப்பட்ட நடிகையிடம் தனது தவறுக்காக மன்னிப்பு கேட்டார் ஷைன் டாம் சாக்கோ. இந்த நிலையில் அதே படத்தில் அறிமுகமாகியுள்ள அபர்ணா ஜான்சன் என்கிற இன்னொரு நடிகையும் தற்போது அந்த படத்தின் படப்பிடிப்பில் ஷைன் டாம் சாக்கோ தன்னிடம் ஆபாசமான வார்த்தைகளில் பேசி அத்துமீறி நடந்து கொள்ள முயற்சித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அபர்ணா ஜான்சன் கூறும்போது, “படப்பிடிப்பு தளத்தில் ஒரு காட்சிக்கான ரிகர்சலின் போது அல்லது அடுத்த காட்சிக்காக காத்திருக்கும்போது அல்லது கொஞ்சம் ஓய்வு இடைவெளி கிடைத்தாலோ கூட ஷைன் டாம் சாக்கோ தேவையில்லாமல் ஆபாச அர்த்தம் தொனிக்கும் வார்த்தைகளில் உரையாடலை தொடர்வதை வாடிக்கையாக வைத்திருந்தார். ஏற்கனவே வின்சி அலோசியஸ் சொன்னது போல வெள்ளை நிற பவுடர் போல இவரது உதட்டில் ஒட்டி இருந்ததை நானும் பார்த்தேன்.
நான் சினிமாவுக்கு புதிது என்பதால் இந்த பிரச்னை குறித்து யாரை அணுகுவது என தெரியாமல் முதலில் திகைத்தேன். நல்ல வேலையாக எனக்கு சவுஜன்யா வர்மா என்கிற வழக்கறிஞரின் வழிகாட்டுதல் கிடைத்தது. அதன் பிறகு வந்த நாட்களில் எனது படப்பிடிப்பு ஷெட்யூல்கள் மாற்றி அமைக்கப்பட்டு நான் காக்க வைக்கப்படாமல் என்னுடைய காட்சிகள் வேகவேகமாக படமாக்கப்பட்டு எனக்கு எந்த இடைஞ்சலும் இல்லாமல் அனுப்பி வைக்கப்பட்டேன். ஷைன் டாம் சாக்கோவின் நடத்தையும் பேச்சும் அவர் போதைப்பொருள் உட்கொண்டதால் அப்படி நடந்து கொள்கிறாரா, இல்லை அவருக்கு மருத்துவ ரீதியாகவே பிரச்னை இருக்கிறதா என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியவில்லை” என்று கூறியுள்ளார்.