இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 51வது படம் 'குபேரா'. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம் ஜூன் 20ம் தேதி வெளியாகிறது. தனுசுடன் ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்திற்காக தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் தனுஷ் பாடிய 'போய்வா நண்பா' என்ற பாடல் வெளியாகி பெரிய அளவில் வரவேற்பு பெற்றது.
இந்நிலையில் தற்போது இந்த குபேரா என்ற பான் இந்தியா படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்ற சில நிறுவனங்கள் முயற்சி எடுத்து வந்த நிலையில் தற்போது அமேசான் பிரைம் நிறுவனம் 50 கோடி ரூபாய்க்கு வாங்கி இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.