'ஜெய் ஹனுமான்' விரைவில் ஆரம்பம் | சோனி விழா : வருகிறது புதிய சேனல் | கடும் எதிர்ப்பால் மனோஜ் பாஜ்பாய் படத் தலைப்பு மாற்றம் | தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கு தடை விதிக்க மறுப்பு | பிளாஷ்பேக் : படம் பார்க்கும் பெண்களுக்கு குடம் பரிசு | பிளாஷ்பேக் : 2 ஆங்கில படங்களை தழுவி உருவான 'தங்கமலை ரகசியம்' | யார் ஆரம்பித்தது என தெரியவில்லை, பயமாக உள்ளது : மிருணாள் தாகூர் | 'டாக்சிக்' வியாபாரம், வங்கிக் கணக்கு வெளியிடுகிறேன் : தில் ராஜு | முதல் படம் 'மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ்: வீடியோ வெளியிட்டு திரிஷா நெகிழ்ச்சி | மூன்று மொழிகளிலும் வேகமாக வளரும் அனஸ்வரா ராஜன் |

ஒரு காலத்தில் தமிழில் கொடி கட்டி பறந்த தமன்னாவுக்கு இப்போது தமிழில் படங்கள் இல்லை என்பதை நம்புவது கஷ்டமாகதான் இருக்கும். ஜெயிலர் படத்தில் அவர் ஆடிய குத்தாட்டம் அவ்வளவு பிரபலம். அவர் ஹீரோயினாக நடித்த அரண்மனை 4 பெரிய ஹிட். 100 கோடிக்கு மேல் வசூலித்தது. ஆனாலும், அவருக்கு அடுத்த படங்கள் தமிழில் சரிவர அமையவில்லை. அவர் தமிழில் நடித்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. முன்னணி ஹீரோக்கள் தமன்னா வேணாம். அவர் இப்போது காதல் வயப்பட்டு இருக்கிறார். காதலன் தலையீடு இருக்கும் என அவரை ஒதுக்குகிறார்களாம். இளம் ஹீரோக்கள் வயது காரணமாக, தமன்னாவுடன் ஜோடி சேர தயங்குகிறார்களாம். முன்பை விட அழகாக இருக்கிறேன். நன்றாக தமிழ் பேசுகிறேன். நல்ல நடிக்கிறேன் என்று தமிழகத்தில் பலர் சொல்கிறார்கள். ஆனால், வாய்ப்புகள் வருவது இல்லை. நான் இப்போது காதலனுடன் இல்லை என்று புலம்புகிறாராம் தமன்னா.