பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! | கே.பி.ஒய். பாலாவின் ‛காந்தி கண்ணாடி' செப்., 5ல் ரிலீஸ் | ரஜினியின் ஒர்க் அவுட் வீடியோ : வைரலாக்கும் ரசிகர்கள் | கூலியில் வீணடிக்கப்பட்ட பிரபல மலையாள வில்லன் நடிகர் | நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க வந்த நடிகர் கார் விபத்தில் சிக்கினார் | யாரும் சங்கத்தை விட்டு விலகவில்லை : ஓட்டளித்த பின் மோகன்லால் பேட்டி | கூலியில் கவனம் பெற்ற லொள்ளு சபா மாறன் |
லப்பர் பந்து படத்தில் 'கெத்து' தினேஷ் ஜோடியாக நடித்தவர் மலையாள நடிகை சுவாசிகா. அவர் நடிப்பு பேசப்பட்டது. அடுத்து தமிழில் நிறைய வாய்ப்புகள் வரும். பல படங்களில் ஹீரோயினாக நடிக்கலாம் என எதிர்பார்த்து இருந்தார். ஆனால், அவருக்கு ஹீரோயின் வாய்ப்புக்கு பதில் அம்மா, சகோதரி வாய்ப்புகளே கிடைக்கிறதாம்.
ரெட்ரோ படத்தில் சின்ன வயது சூர்யா வளர்ப்பு அம்மாவாக நடித்தார் சுவாசிகா. அடுத்து மாமன் படத்தில் சூரியின் சகோதரியாக நடித்து வருகிறார். எனக்கு சின்ன வயது, அழகாகவும் இருக்கிறேன். ஆனாலும், லப்பர் பந்து பட தாக்கத்தால் எனக்கு இப்படிப்பட்ட மெர்சுடு ரோல்களே வருகிறது. ஆனாலும், பெரிய படங்கள், நல்ல கதை என்பதால் மறுக்காமல் நடிக்கிறேன். விரைவில் ஹீரோயின் ரோல் வரும் என நம்புகிறேன் என்கிறார் சுவாசிகா.
தமிழ் சினிமாவில் சுவாசிகாவுக்கு இது 2வது ரவுண்டு. 2009ல் வெளியான வைகை மற்றும் கோரிப்பாளையம் மற்றும் சில படங்களில் ஹீரோயினாக நடித்து இருக்கிறார்.