பாடகி கெனிஷா உடன் ஜோடியாக வந்த ரவி மோகன் : தந்தை என்பது பெயர் அல்ல பொறுப்பு என ஆர்த்தி ரவி காட்டம் | டிடி நெக்ஸ்ட் லெவல் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் | மீண்டும் போதையில் கலாட்டா ; ஜெயிலர் வில்லன் கைதாகி ஜாமினில் விடுதலை | காந்தாரா படப்பிடிப்பில் விபத்து நடக்கவில்லை ; தயாரிப்பாளர் தரப்பில் விளக்கம் | 'மாமன்' பட இசையமைப்பாளரிடம் மன்னிப்பு கேட்ட சூரி | அல்லு அர்ஜுனின் தோற்றத்தில் இருப்பவருக்கு ஜாக்பாட் ; விளம்பரத்தில் நடிக்க 12 லட்சம் சம்பளம் | 50 வருட அனுபவம் கொண்ட தேசிய விருது ஒளிப்பதிவாளர் டைரக்சனில் நடிக்கும் யோகிபாபு | கரையான் அரித்த ஒரு லட்சம்: ஏழைப் பெண்ணுக்கு உதவிய ராகவா லாரன்ஸ் | சூர்யா- 45வது படத்தின் டைட்டில் வேட்டை கருப்பு? | போர் பதட்டம் எதிரொலி: 'தக்லைப்' படத்தின் இசை வெளியீட்டு விழாவை தள்ளி வைத்த கமல்ஹாசன்! |
நடிகர் ஜெயம் ரவி எனும் ரவி மோகன் தயாரிப்பாளர் சுஜாதாவின் மகளான ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ள நிலையில் கடந்தாண்டு இருவரும் பிரிவதாக அறிவித்தனர். விவாகரத்து கேட்டு கோர்ட் படியேறி உள்ளனர். இந்த வழக்கு நடந்து வருகிறது. இதனிடையே பாடகி மற்றும் ஹீலருமான கெனிஷா பிரான்சிஸ் என்பவருடம் ரவி மோகன் நெருக்கம் காட்டினார். இருவரும் நண்பர்கள், ஹீலர் மையம் வைக்க போகிறோம் என்றெல்லாம் கூறி வந்தனர்.
இதனிடையே தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் இல்ல விழாவில் பங்கேற்ற ரவி மோகன் கூடவே கெனிஷாவையும் அழைத்து வந்தார். இருவரும் பட்டு உடையில் தங்க நிறத்தோற்றம் கொண்ட ஒரே மாதிரியான நிறத்தில் உடை அணிந்து வந்தனர். கெனிஷாவை கைபிடித்து அழைத்து வந்தார் ரவி. இந்த வீடியோ வலைதளங்களில் வைரலானது. இருவம் காதலிப்பதாகவும், லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்வதாகவும் பேசப்பட்டது.
இந்நிலையில் இவர்கள் ஜோடியாக வந்து செல்லும் வீடியோ, போட்டோக்களை பார்த்து தனது ஆதங்கத்தை கொட்டி உள்ளார் ஆர்த்தி ரவி. அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது...
ஓராண்டாக நான் மவுனத்தை மட்டுமே சுமந்து வந்தேன். இது என் பலவீனம் அல்ல. என் மீதான குற்றச்சாட்டு, மோசமான கிசுகிசுக்களை எதிர்கொண்டேன். இதற்கு என்னிடம் பதில் இல்லாமல் இல்லை. என் குழந்தைகள் தேவையின்றி சர்ச்சைகளை சுமக்க வேண்டாம் என அமைதியாக இருந்துவிட்டேன்.
ஆனால் இன்று வெளியான போட்டோக்கள், வீடியோக்கள் வாயிலாக உலகத்திற்கு தெரிந்துவிட்டது. எனது விவாகரத்து வழக்கு தொடர்கிறது. அன்பு, விஸ்வாசம், நம்பிக்கையுடன் 18 ஆண்டுகளாக நான் அவருக்கு துணையாக இருந்தேன். ஆனால் அவர் விலகிச் சென்றுள்ளார். ஒவ்வொரு நாளும் இரவில் கண்ணீரை சுமந்து சென்றேன். ஒருகாலத்தில் அவரை எனது பெருமை என்று நினைத்தேன். ஆனால் இன்று அவரின் அறிவுறுத்தல் பேரில் வீட்டை விட்டு வெளியேறும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளேன்.
நான் பணத்திற்காக இருந்தேன் என குற்றம் சாட்டப்பட்டேன். ஒருவேளை அது உண்மையாக இருந்திருந்தால் நீண்ட காலத்திற்கு முன்பே என் தனிப்பட்ட நலன்களைப் பாதுகாத்திருப்பேன். ஆனால் நான் அன்பை மட்டுமே எதிர்பார்த்தேன். அதனால் தான் அது என்னை இங்கு கொண்டு வந்து நிறுத்தி உள்ளது.
என் பிள்ளைகளுக்கு 10 மற்றும் 14 வயதாகிறது. அவர்களுக்கு தேவை பாதுகாப்பு, அதிர்ச்சி அல்ல. சட்டப் பிரிவு பிரச்னைகளை எல்லாம் அவர்கள் புரிந்து கொள்ளக் கூடிய வயது அல்ல. நான் சந்திக்க முயற்சித்த போது தவிர்த்தது, அழைப்புகளுக்கு பதிலளிக்காமல் இருந்தது இவை எல்லாம் எனக்கு காயங்களே.
இன்று நான் ஒரு மனைவியாகவோ, அநீதி இழைக்கப்பட்ட பெண்ணாகவே பேசவில்லை. என் குழந்தைகளின் நலனுக்காக மட்டுமே பேசுகிறேன். நான் இப்போது பேசவில்லை என்றால் அவர்களுக்கு தோல்வியாகிவிடும். நீங்கள் தங்க பட்டில் போகலாம். உங்கள் பொது வாழ்க்கையில் உங்கள் ரோல்களை மாற்றலாம். ஆனால் உண்மையை மீண்டும் எழுத முடியாது. தந்தை என்பது வெறும் பெயர் அல்ல, அது ஒரு பொறுப்பு.
சட்டப்பிரச்னை முடியும் வரை இன்ஸ்டாவில் ஆர்த்தி ரவி என்றே இருப்பேன். தயவு செய்து என்னை முன்னாள் மனைவி என அழைப்பதை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இது பழிவாங்கவோ அல்லது சண்டையிடவோ அல்ல, பாதுகாக்க. ஒரு தாயின் தவிப்பு இது. நான் அழ மாட்டேன், நிச்சயம் நிமிர்ந்து நிற்பேன். இன்னும் உன்னை அப்பா என்று அழைக்கும் இரண்டு பையன்களுக்காக. அவர்களுக்காக, நான் ஒருபோதும் பின்வாங்க மாட்டேன்.
இவ்வாறு ஆர்த்தி தெரிவித்துள்ளார்.