கத்தியை அந்தரத்தில் சுழற்றியபடி கேக் வெட்டிய பாலகிருஷ்ணா | பிரேமலு 2 தாமதம் ஏன் ? தயாரிப்பாளர் தகவல் | ராம்சரண் தயாரிக்கும் முதல் படத்தின் படப்பிடிப்பில் தண்ணீர் டேங்க் உடைந்து விபத்து | பிறந்தநாள் பார்ட்டியில் போதைப்பொருள் : புஷ்பா பாடகி மீது வழக்கு பதிவு | ஊர்வசி மறுத்திருந்தால் மகள் நடிகையாகி இருக்க மாட்டார் : கண் கலங்கிய மனோஜ் கே ஜெயன் | ரிவால்வர் ரீட்டா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | அல்லு அர்ஜுனுக்கு பதில் ஜுனியர் என்டிஆரை இயக்கும் திரி விக்ரம் | நாளை வெளியாகும் ‛குபேரா' படத்தின் டிரைலர் | ‛கூலி' படத்தின் தெலுங்கு வியாபாரம் தொடங்கியது | அல்லு அர்ஜுன் - திரிவிக்ரம் சீனிவாஸ் படம் டிராப் ? |
தமிழ் சினிமாவில் சிறப்பான ஓபனிங் வைத்துள்ள நடிகர் அஜித் குமார் என்ற பெயர் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் எப்போதுமே உண்டு. அவர் நடித்து கடந்த மாதம் வெளிவந்த 'குட் பேட் அக்லி' திரைப்படம் தமிழகத்தில் நிறைய லாபத்தைக் கொடுத்த படமாக இருந்திருக்கிறது. இங்கு மட்டுமே இரண்டு வாரங்களில் 172 கோடி வசூலித்ததாக படத்தின் தமிழக வினியோகஸ்தர் ராகுல் சில தினங்களுக்கு முன்பு படத்தின் 25வது நாளில் வெளியிட்ட வீடியோவில் குறிப்பிட்டிருந்தார்.
இன்று ஓடிடியில் வெளியாகும் இப்படம் சில தியேட்டர்களில் இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறது. அதேசமயம் இப்படத்தைப் பொறுத்தவரையில் தயாரிப்பாளருக்கு நஷ்டம் தான் ஏற்பட்டுள்ளது என சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. இது குறித்து திரையுலகில் விசாரித்த போது, படத்தின் பட்ஜெட் காரணமாக அப்படி ஒரு சிக்கல் வந்திருக்க வாய்ப்புள்ளது என்றே தெரிவிக்கிறார்கள்.
ஓடிடி, சாட்டிலைட் உரிமை, ஆகியவை தயாரிப்பாளருக்கு நேரடி வருவாய் கணக்கில் சேர்ந்தாலும் தியேட்டர்களில் வெளியிட்ட வகையில் கிடைக்கும் பங்குத் தொகை நிறைவாக இருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள். தயாரிப்பாளருக்கு 50 கோடிக்கு மேல் நஷ்டம் வந்திருக்க வாய்ப்புள்ளது என்பதே பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத் தகவல்.
அதை ஈடுகட்டும் வகையில்தான் அஜித்குமார் தனது அடுத்த படத்தையும் அந்த நிறுவனத்திற்கே நடித்துத் தர சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்றும் சொல்கிறார்கள். 'குட் பேட் அக்லி' படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரனே படத்தை இயக்குவாரா அல்லது வேறு யாராவது இயக்குவார்களா என்பது விரைவில் தெரிய வரும்.
அதிகாரப்பூர்வ வசூல் என்ன என்பதை படம் தியேட்டர்களில் ஓடி முடித்த பின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தால் மட்டுமே உண்மை நிலவரம் என்ன என்பது தெரிய வரும். அதுவரையில் இது போன்ற தகவல்கள் திரையுலகத்திலும் சமூக வலைத்தளங்களிலும் சுற்றி வரும்.