சுதந்திர போராட்ட வீரர்களை போற்றும் 'பஹேலி கீத் 2' பாடல்: முகேஷ் கன்னா வெளியிட்டார் | ஒவ்வொரு கேரக்டருக்கும் இரண்டு போஸ்டர் ; நானி பட இயக்குனரின் புதிய ஐடியா | 20 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'கூலி' டிரைலர் | திரிஷ்யம்-2 தயாரிப்பாளர் மீது பண மோசடி வழக்கு ; தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு | இயக்குனர் மீது பொய் வழக்கு ; நடிகையை தொடர்ந்து அவரது வழக்கறிஞரும் கைது | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை நிறுத்தி வைத்து உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் | காந்தாரா 2வில் ‛கனகாவதி' ஆக ருக்மணி வசந்த் | கூலி படத்தில் அதிர்ச்சியூட்டும் இடைவேளை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட தகவல் | அஜித் 64 படத்தில் இணையும் இரண்டு நாயகிகள் | செல்வாக்கு மிக்கவர்களுக்கு கூட வளைந்து கொடுக்க மறுக்கும் சென்சார் போர்டு? |
விஜய் நடிக்கும் கடைசி படமான 'ஜனநாயகன்' படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தின் முக்கிய பகுதிகளின் படப்பிடிப்பு கொடைக்கானல் மலைபகுதியில் நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக விஜய் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடைக்கானல் சென்றார். தாண்டிக்குடி பகுதியில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான பங்களாவில் தங்கி இருந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டு வந்தார்.
நேற்று 3வது நாளாக தகவுமலை பகுதியில் படப்பிடிப்பு நடந்தது. தான் தங்கி இருக்கும் இடத்திலிருந்து சில கிலோ மீட்டர்கள் வரை கரடு முரடான மலை பாதையில் ஜீப்பில் பயணம் செய்த விஜய் அதன்பிறகு பாதை இல்லாத காரணத்தால் ஜீப்பில் இருந்து இறங்கி சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்தே படப்பிடிப்புக்கு சென்றார்.
அங்கிருந்து தகவுமலை நாதன் சிவன் கோவிலை அடைந்த அவர், சிறிது நேரம் கோவிலில் ஓய்வெடுத்து விட்டு பின்னர் அங்கு நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார். படப்பிடிப்பை முடித்து மீண்டும் 3 கிலோ மீட்டர் நடந்து வந்து, பின்னர் ஜீப்பில் தாண்டிக்குடி திரும்பினார். படப்பிடிப்புகள் முடிந்து விட்டதால் விஜய் இன்று சென்னை திரும்பினார்.
இந்த பயணத்தின்போது வழிநெடுகிலும் மலைக்கிராம மக்கள் விஜயை காண திரண்டிருந்தனர். அப்போது திறந்தவெளி ஜீப்பில் நின்றபடி விஜய் கையசைத்து சென்றார். தாண்டிக்குடி அருகே பெண்கள் வரிசையாக நின்று ஆரத்தி எடுத்தும், மலர்தூவியும் கும்ப மரியாதையுடன் அவரை வரவேற்றனர்.