மீண்டும் வருகிறோம்- மங்காத்தா படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்ட வெங்கட் பிரபு! | ஜனவரி 23ல் ஓடிடியில் வெளியாகும் தனுஷின் தேரே இஸ்க் மெய்ன்! | விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ்குமார் வரிசையில் கங்கை அமரன், தேவிஸ்ரீ பிரசாத் | 25 ஆண்டுகளுக்கு பின் மறுமணமா : பார்த்திபனின் 'நச்' பதில் | ஜனநாயகன் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு; நீதிமன்ற முழு வாதங்கள் இதோ... | மீண்டும் அப்பாவாகிறார் அட்லி | பிளாஷ்பேக் : ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ரகுவரன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் இரண்டு கதைகள் | ஜப்பானில் 'புஷ்பா 2' படத்திற்கு குறைவான வரவேற்பு | உண்மை சம்பவங்கள் பின்னணியில் 'மை லார்ட்' |

பாரதிராஜா இயக்கிய 'தெக்கத்திப் பொண்ணு' டி.வி தொடர் மூலம் பிரபலமானவர், பெருமாயி. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த அன்னம்பாரிபட்டியை சேர்ந்தவர். ஏராளமான படங்களில் கிராமத்து பாட்டியாக, அப்பத்தாவாக நடித்தார். 'மனம் கொத்திப் பறவை, வில்லு, தண்டட்டி' ஆகியவை அவர் நடித்த முக்கியமான படங்கள்.
73 வயதான பெருமாயி கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவு காரணமாக நடிக்காமல் இருந்தார். இந்த நிலையில் பெருமாயி நேற்று வீட்டில் மயங்கி விழுந்தார். குடும்பத்தினர் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். பெருமாயிக்கு ஒரு மகனும், மூன்று மகள்களும் உள்ளனர்.




