இப்போதே புரமோஷனை ஆரம்பித்த 'வாரணாசி' படக்குழு | 'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி | தமிழுக்கு வரும் துளு நடிகை | பிளாஷ்பேக் : மம்முட்டி கேரக்டரில் நடித்த சிவகுமார் | பிளாஷ்பேக் : வாய்ப்புக்காக பிச்சைக்காரர் தோற்றத்திற்கு மாறிய ஜெமினி கணேசன் | இந்த வாரமும் ஐந்திற்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் | காந்தாரா பாணியில் உருவாகும் 'கரிகாடன்' | அனுமனை இழிவுபடுத்தி விட்டார் : ராஜமவுலி மீது போலீசில் புகார் |

நடிகர் சூர்யா தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் அவரது 45வது படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார்.
இதற்கிடையில் 'வாத்தி, லக்கி பாஸ்கர்' ஆகிய படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். இதனை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கின்றது. இதற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இது சூர்யாவின் 46 படமாக உருவாகிறது. சமீபத்தில் இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். மே இரண்டாம் வாரத்தில் இதன் படப்பிடிப்பு துவங்குகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமம் நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் ரூ. 85 கோடிக்கு கைப்பற்றியதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இதுவே சூர்யா படங்களில் அதிக விலைக்கு டிஜிட்டல் வியாபாரம் ஆன படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு காரணமாக வெங்கி அட்லூரி இயக்கத்தில் கடைசியாக வெளியான 'லக்கி பாஸ்கர்' படம் ஓடிடியில் சாதனை படைத்தது. இதுவே இந்த வியாபாரத்திற்கு காரணம் என்கிறார்கள்.