தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ஏவிஎம் தயாரித்த படம் 'நல்லவனுக்கு நல்லவன்'. இந்த படத்தில் 'முரட்டுக்காளை' படத்தில் ஜெய்சங்கரை வில்லன் ஆக்கியது போன்று ஒரு ஹீரோவை ரஜினிக்கு வில்லன் ஆக்குவது என்று ஏவிஎம் முடிவு செய்தது. இதற்காக தேர்வானவர் அப்போது இளம் நடிகராக வளர்ந்து வந்த கார்த்திக்.
ஏவிஎம் சரவணன், கார்த்திக்கை சந்தித்து பேசினார். 'ஏவிஎம் நிறுவனத்தில் நடிப்பது மகிழ்ச்சி. ஆனால் நான் வில்லனாக நடித்தால் எனது இமேஜ் போய்விடும், அதன்பிறகு வில்லனாக மட்டும் நடிக்க கூப்பிடுவார்கள்' என்று கூறி நடிக்க மறுத்தார்.
இதற்கு பதில் அளித்த சரவணன் 'அந்த கவலை உங்களுக்கு வேண்டாம். இந்த படத்தில் வில்லனாக நடியுங்கள், அடுத்து உங்களை ஹீரோவாக போட்டு ஒரு படம் எடுப்போம், அதை எஸ்.பி.முத்துராமனே இயக்குவார். அந்த படத்தின் கதை உங்கள் வில்லன் இமேஜை உடைப்பதாக இருக்கும்' என்றார். அதன்பிறகு கார்த்திக் நடிக்க சம்மதித்தார்.
கார்த்திக்கு கொடுத்த வாக்குறுதிக்காக கார்த்திக் நடிக்க, எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் உருவான படம் 'நல்லதம்பி'. இந்த படத்திற்கு பிறகு தொடர்ந்து கார்த்திக் ஹீரோவாக நடித்தார்.