தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த ரெட்ரோ படத்தின் முதல்நாள் வசூல் 17 கோடியே 75 லட்சம் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தமிழக வசூல் மட்டுமே. உலகம் முழுக்க வசூல் என்று கணக்கிட்டால், 25 கோடிகள் வரை வாய்ப்புள்ளது. ரெட்ரோ படத்துக்கு சிறப்பு காட்சி போடப்படவில்லை. டிக்கெட் விலை அதிகமாக விற்கப்படவில்லை. அதனால், இது நியாயமான வசூல் என்று அவர்கள் தரப்பு சொல்கிறது. கோடை விடுமுறை தொடங்கிவிட்டதால், தியேட்டருக்கு மக்கள் கூட்டம் அதிகமாக வரும். ஆகவே வரும் வாரங்களில் படத்தின் வசூல் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரெட்ரோ 100 கோடியை தாண்டுமா? சூர்யாவுக்கு ஒரு பெரிய வெற்றி படமாக இருக்குமா என்பதே பலரின் கேள்வியாக உள்ளது. சூர்யா நடித்த சிங்கம்2, சிங்கம் 3 காப்பான், கங்குவா போன்ற சில படங்கள் 100 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியது.