இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருக்கும் பிரியங்கா, ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆகியிருந்த நிலையில், தற்போது வசி என்ற தனது நீண்ட நாள் காதலரை கடந்த வாரத்தில் திருமணம் செய்து கொண்டார். தனக்கு இரண்டாவது திருமணம் நடந்த புகைப்படங்களை பிரியங்கா வெளியிட்ட பிறகுதான் அனைவருக்கும் தெரிய வந்தது.
இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது என்று பிரியங்காவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், ''திருமணத்திற்கு பிறகு ரொம்ப மகிழ்ச்சியாகவும் சந்தோசமாக இருக்கிறேன். காதல் கணவருடன் வாழ்க்கை ரொம்ப ஜாலியாக உள்ளது. மேலும், வாழ்க்கை என்பது சிறந்ததிலும் சிறந்ததாக இருக்க வேண்டும். முதலில் நண்பர்களாக பழக வேண்டும். அந்த ரிலேஷன்ஷிப்பில் நல்லதொரு நட்பு இருந்தால் அதில் எப்போதுமே ஒரு அழகான காதல் இருந்து கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட திருமண வாழ்க்கையில் நல்லதொரு பீலிங் இருக்கும்'' என்று தெரிவித்திருக்கிறார் பிரியங்கா.