22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‛ரெட்ரோ'. பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ஜோஜு ஜார்ஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மே 1ம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று பிரமாண்டமாய் நடந்தது.
விழாவில் பேசிய சூர்யா : ‛‛ரெட்ரோ என்றால் நாம் கடந்து வந்த காலத்தை குறிக்கும். கொஞ்ச நாட்களுக்கு முன்பு ஒரு மூவாயிரம் பேரை சந்தித்து அவர்களை கட்டிப்பிடித்துப் போட்டோ எடுத்துக் கொண்டேன். எனது வாழ்க்கை அரைநூற்றாண்டை நெருங்குகிறது. ஆனால், வந்தவர்கள் அனைவரும் 20 வயதுதான் இருந்தார்கள். என் மீது மிகுந்த அக்கறையுடன் அவர்கள் என்னை நலம் விசாரித்தனர். ரசிகர்களின் அன்பு போதும் நான் எப்போதும் நன்றாக இருப்பேன்.
வாழ்க்கை மிகவும் அழகானது, அதை நம்புங்கள். வாய்ப்பு வரும்போது விட்டுவிடாதீர்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு நோக்கம் உள்ளது. என் வாழ்க்கைக்கான நோக்கம் அகரம் பவுண்டேஷன் தான். இதன்மூலம் சுமார் 8 ஆயிரம் தம்பி, தங்கைகளை பட்டதாரிகளாக ஆக்க முடிந்தது. இந்த தருணத்தில் எனது கண்ணாடிப்பூவான ஜோதிகாவுக்கும் நன்றி.
இவ்வாறு சூர்யா பேசினார்.