விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
காமெடி நடிகராக இருந்து கதையின் நாயகனாக உயர்ந்துள்ளவர் சூரி. 'விடுதலை 1, விடுதலை 2, கருடன்' ஆகிய படங்களில் அவருடைய நடிப்பிற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அடுத்து அவர் நாயகனாக நடித்துள்ள 'மாமன்' படம் மே 16ம் தேதி வெளியாக உள்ளது.
'விடுதலை' படத்தைத் தயாரித்த தயாரிப்பு நிறுவனமான ஆர்எஸ் இன்பொடெயின்மென்ட் சூரி கதையின் நாயகனாக நடிக்க உள்ள 'மண்டாடி' படத்தைத் தயாரிக்க உள்ளது. இப்படத்தின் முதல் பார்வையை இன்று வெளியிடுகிறார்கள். இதற்காக இன்று இரவு சென்னையில் நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளார்கள்.
இப்படத்திற்கு இயக்குனர் வெற்றிமாறன் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பொறுப்பேற்றுள்ளார். அவரது உதவியாளர்களில் ஒருவரான மதிமாறன் புகழேந்தி இப்படத்தை இயக்குகிறார். இதற்கு முன்பு இவர் ஜிவி பிரகாஷ்குமார், கவுதம் மேனன் நடித்த 'செல்பி' படத்தை இயக்கியவர்.
'மண்டாடி' படத்தில் சத்யராஜ், மகிமா நம்பியார், சஞ்சனா நமிதாஸ், அச்யுத் குமார், ரவீந்திர விஜய், சுஹாஸ் என நடிப்பில் பெயர் வாங்கியவர்கள் உடன் நடிக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைக்க, எஸ்ஆர் கதிர் ஒளிப்பதிவு செய்ய, பீட்டர் ஹெயின் சண்டைக் காட்சிகளை அமைக்க, கிரண் வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்கள். நடிகர்கள், இதரக் கலைஞர்கள் என திறமையானவர்களுடன் கூட்டணி சேர்ந்துள்ளார் சூரி.