'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
மலையாள நடிகர் துல்கர் சல்மான் கடந்த சில வருடங்களாக மலையாள மொழி படங்களைக் கடந்து தமிழ், தெலுங்கு, ஹந்தி ஆகிய மொழி படங்களிலும் ஆர்வமாக நடித்து வருகிறார். அடுத்து ஒரு புதிய தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அதன்படி, பரசுராமின் உதவி இயக்குநர் ரவி இயக்கும் புதிய படத்தில் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்கிறார். இதனை ஸ்ரீ லஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். சிறிய இடைவெளிக்குப் பிறகு பூஜா ஹெக்டே மீண்டும் தெலுங்கு படத்திற்கு திரும்புகிறார். ஏற்கனவே துல்கர் சல்மானுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே சீதா ராமம் படத்தில் நடிக்கவிருந்தார். ஆனால் கால்ஷீட் பிரச்னையால் அப்போது நடிக்கவில்லை. அவருக்கு பதில் மிருணாள் தாக்கூர் நடித்தார். இந்த படம் மூலம் இவர்கள் முதன்முறையாக இணைந்து நடிக்க போகின்றனர்.