புதிய காதலியுடன் விழாவில் ஆமீர்கான் | பராசக்தி, தேவதையை கண்டேன், கிங்ஸ்டன் - ஞாயிறு திரைப்படங்கள் | அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? |
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 350 படங்களுக்கு மேல் நடித்தவர், பல வேடங்களில் நடித்தவர், நடிப்பின் சிகரம் என்றெல்லாம் போற்றப்படுகிறார். ஆனால் அவர் சப்தமே இல்லாமல் பல சாதனைகளை செய்திருக்கிறார். அதில் முக்கியமானது முதல் நூறாவது பட நாயகன் சிவாஜி.
சிவாஜிக்கு முந்தைய காலகட்ட நடிகர்கள் 50 படங்கள் வரை நடித்தது பெரிய விஷயமாக இருந்தது. நடிகர் திலகம் சிவாஜி தான் முதல் 100 படங்களில் நடித்த ஹீரோ. சிவாஜியின் நூறாவது படம் 'நவராத்திரி'. இந்தப் படத்தில் சிவாஜி 9 வேடங்களில் நடித்தார். படமும் 100 நாட்களுக்கு மேல் ஓடியது. சிவாஜிக்கு பிறகு எம்ஜிஆர், ஜெமினி கணேசன், ரஜினி, கமல் உள்ளிட்ட பல ஹீரோக்கள் நூறு படங்களில் நடித்தனர்.
அதோடு சிவாஜியின் இன்னொரு சாதனையும் உண்டு. இன்றைக்கு ஒரே நாளில் ஒரே நடிகர் நடித்த இரண்டு படங்கள் வெளிவந்தால் அது அதிசயமாக பார்க்கப்படுகிறது. ஆனால் ஒரு முறை இரு முறை அல்ல 17 முறை சிவாஜி நடித்த இரண்டு படங்கள் ஒரே நாளில் திரைக்கு வந்திருக்கிறது.