அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
தெலுங்கில் பிரமாண்டமான வரலாற்று பின்னனியில் உருவாகி வரும் படம் 'கண்ணப்பா'. மகாபாரதம் தொடரை இயக்கிய முகேஷ் குமார் சிங் இந்த படத்தை இயக்கி வருகிறார். வரலாற்று பின்னனியில் சிவ பக்தர் கண்ணப்பரை வைத்து இப்படம் உருவாகி வருகிறது.
இதில் கண்ணப்பராக விஷ்ணு மஞ்சு நடித்து வருகிறார். காஜல் அகர்வால், பீர்த்தி முகுந்தன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்க, மோகன் பாபு, பிரபாஸ், சரத்குமார், மோகன்லால், அக்ஷய் குமார் ஆகியோர் சிறப்பு வேடத்தில் நடித்து வருகின்றனர்.
ஏற்கனவே இப்படம் ஏப்ரல் 25ந் தேதி அன்று வெளியாகுவதாக இருந்தது. ஆனால், இந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகளில் ஏற்பட்ட தாமதத்தின் காரணமாக தள்ளிப்போவதாக சமீபத்தில் அறிவித்தனர். இப்போது கண்ணப்பா படம் வருகின்ற ஜூன் 27ம் தேதி அன்று திரைக்கு வருவதாக அறிவித்துள்ளனர். பல்வேறு மொழிகளில் பான் இந்தியா படமாக இப்படம் வெளியாக உள்ளது.