'இந்தியன் 3' படத்திற்கு கெடுவைத்த ஷங்கர்! | குந்தவையை வீட்டுக்குள்ளேயே குந்த வைக்கிறது நல்லது! - பார்த்திபன் | ஹர்பஜன் சிங்கின் இரண்டாவது தமிழ் படம் குறித்து தகவல் இதோ! | 15 ஆண்டுகளுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் 'ஆரண்ய காண்டம்' | உறியடி விஜய்குமார் நடிக்கும் 'அறிவு' | பெண்களின் உணர்வை சொல்லும் 'மயிலா': மகளிர் தினத்தில் டீசர் வெளியீடு | ஏப்.,3ல் ரிலீசாகும் பரத் நடிக்கும் 'காளிதாஸ் 2' | கென் கருணாஸின் 'யூத்' டிரைலர் வெளியீடு | சிரஞ்சீவி மனைவி திரும்பத் திரும்ப கேட்கும் இளையராஜா - சிரஞ்சீவி பாடல் | தயாரிப்பாளரிடம் கெஞ்சிய நாயகி |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த 'லியோ' படத்தின் கதையும், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து இன்று வெளியான 'குட் பேட் அக்லி' படத்தின் கதையும் ஏறக்குறை ஒன்றுதான் என சில வாரங்களுக்கு முன்பு ஒரு தகவல் பரவியது. இன்று 'குட் பேட் அக்லி' படம் வெளியான பின் அந்தத் தகவல் உண்மைதான் என்பது உறுதியானது.
“தங்களது குடும்பத்திற்காக முந்தைய தங்களது 'டான்' வாழ்க்கையைத் தியாகம் செய்து வாழ முடிவு செய்கின்றார் நாயகன். ஆனால், பழைய பகை அவர்களை மீண்டும் துரத்த, தியாகம் செய்த 'டான்' வாழ்க்கையை மீண்டும் ஆரம்பித்து தங்களைது குடும்பத்தைக் காப்பாற்றுவதுதான் படத்தின் கதை”.
மேலே குறிப்பிட்ட நாயகன் பெயரைச் சொல்லாத கதைச் சுருக்கத்தை 'லியோ' படத்திற்கும், 'குட் பேட் அக்லி' படத்திற்கும் பொருத்திக் கொள்ளலாம்.
இரண்டு படங்களிலுமே நாயகியாக நடித்திருப்பவர் த்ரிஷா. 'லியோ' படத்திலும் அவருக்கு 17 வயது மகன், 'குட் பேட் அக்லி' படத்திலும் 17 வயது மகன். இரண்டு படத்திற்குமே அடுத்தடுத்து கதை கேட்டிருக்க வாய்ப்புண்டு. அப்போது த்ரிஷா என்ன நினைத்திருப்பார் ?.




