நயன்தாராவை உட்படுத்தி சர்ச்சை கருத்து: நடிகர் சங்கம் கண்டனம் | மோகன்லாலின் 'திரிஷ்யம்-3' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்! | திரிஷா மிகவும் கண்ணியமானவர்! -சொல்கிறார் குஷ்பு | 100 கோடியை எட்டிப்பிடிக்குமா ராதிகா சரத்குமாரின் 'தாய் கிழவி'? | ரஜினிகாந்த் Vs விஜய் : வெளிப்படை மோதல் ஆரம்பம் | நயன்தாரா பற்றி சர்ச்சை பேச்சு : வருத்தம் தெரிவித்த சிவி சண்முகம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாலசந்தரை நிரந்தர சினிமா இயக்குநராக மாற்றிய “நீர்க்குமிழி” | 'சேயோன்' படத்தில் 'விருமாண்டி'-ஆக தொடரும் கமல்ஹாசன் | 'உஸ்தாத் பகத் சிங்' விழாப் பேச்சு : மன்னிப்பு தெரிவித்த பார்த்திபன் | கோடையில் வெளி வர காத்திருக்கும் படங்கள் |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் நடிக்க மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த 'கர்ணன்' படம் குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்றது. கொரோனா இரண்டாவது அலை வந்த சமயம் அந்தப் படம் வெளிவந்ததால் வசூல் பாதிக்கப்பட்டது.
அக்கூட்டணி மீண்டும் இணையாதா என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அதற்கேற்றபடி மாரி செல்வராஜ் உடன் மீண்டும் இணைந்து படம் செய்கிறேன் என தனுஷ் 2023 ஏப்ரல் 9ம் தேதி படத்தின் போஸ்டரையும், மாரியுடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்து “பல காரணங்களுக்காக சிறப்பான பெருமை மிகு புராஜக்ட் இது,” எனக் குறிப்பிட்டிருந்தார்.
அந்தப் படத்தை தனுஷின் படத் தயாரிப்பு நிறுவனமான உண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிப்பதாகவும் செய்தி வெளியிட்டிருந்தார்கள். ஆனால், கடந்த இரண்டு வருடங்களாக அந்தப் படம் ஆரம்பமே ஆகவில்லை.
'கர்ணன்' படம் வெளியான இரண்டாவது ஆண்டு நாளில் அந்த அறிவிப்பு வந்தது. மீண்டும் நான்காவது ஆண்டு நாளில் அதே தனுஷ், மாரி செல்வராஜ் கூட்டணியின் அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. ஆனால், படத்தைத் தயாரிப்பது ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்.
இயக்குனர், நடிகர் மாறவில்லை, தயாரிப்பு நிறுவனம் மட்டும் மாறிவிட்டது. இதற்கான காரணம் என்னவென்பது இனிமேல்தான் வெளிவரும்.
வேல்ஸ் பிலிம் நிறுவனம் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து சுமார் 20 படங்களைத் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஜினிகாந்த் - கார்த்திக் சுப்பராஜ் மீண்டும் இணைவதற்காகவும் அந்நிறுவனம் பேசி வருவதாகத் தகவல்.