பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கிறாரா? | மகுடம் படத்தின் அப்டேட் தந்த விஷால் | பராசக்தி படத்திற்காக சிறப்பு கண்காட்சி |

'புஷ்பா 2' படத்திற்குப் பிறகு இந்திய சினிமா ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்த நடிகராக உயர்ந்தவர் அல்லு அர்ஜுன். அவரது அடுத்த படம் குறித்து கடந்த சில மாதங்களாகவே பல்வேறு தகவல்கள் வெளிவந்தன. கடைசியாக, தமிழ் இயக்குனரான அட்லி இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்று உறுதியான செய்திகள் வர ஆரம்பித்தன.
அது இன்று அல்லு அர்ஜுனின் பிறந்தநாளில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்புக்கான வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்கள்.
படத்தை உறுதி செய்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு அட்லியும், அல்லு அர்ஜுனும் அமெரிக்கா சென்றுள்ளார்கள். அங்கு பிரபல விஎப்எக்ஸ் நிறுவனமான லோலா வல்லுனர்களுடன் இருவரும் விவாதித்த வீடியோ, படத்தின் கதை பற்றி அவர்கள் வியந்து பேசிய பேட்டிகள், அல்லு அர்ஜுனின் ஸ்க்ரீன் டெஸ்ட் ஆகியவை அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.
இதையெல்லாம் பார்க்கும் போது உலகத் தரத்திலான ஒரு ஆக்ஷன் படத்தை 'அஅஅ' கூட்டணி கொடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது. படத்தின் கதை நிச்சயம் நார்மலான ஒரு கதையாக இருக்காது, அது கற்பனைக்கு மீறிய ஒரு கதையாக இருக்கும் என்று யூகிக்க முடிகிறது.
'ஜவான்' படம் மூலம் 1000 கோடி வசூலைக் கடந்த இயக்குனர் அட்லி, 'புஷ்பா 2' மூலம் 1800 கோடி வசூலைக் கடந்த அல்லு அர்ஜூன் இருவரும் இணையும் படம், நிச்சயம் 2000 கோடி வசூலைக் கடக்கும் படமாக இருக்கும் என அல்லு அர்ஜுன் ரசிகர்களை இந்த வீடியோ பேச வைத்துள்ளது.
பான் இந்தியா படம் என்பதுதான் இப்போதைய டிரென்ட், இந்தப் படம் பான் வேர்ல்டு படமாக அமையுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.