அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
கவுதம் கார்த்திக் நடிப்பில் 'ரங்கூன்' என்ற படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி, அதையடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் 'அமரன்' படத்தை இயக்கினார். இந்த படம் 300 கோடிக்கு மேல் வசூலித்தது. அடுத்தபடியாக தனுஷின் 55வது படத்தை அடுத்து தான் இயக்குவதாக அறிவித்திருந்தார் ராஜ்குமார் பெரியசாமி. இதற்கான பூஜை சமீபத்தில் மகா சிவராத்திரி அன்று நடந்தது. ஆனால் இன்னும் படப்பிடிப்பு துவங்கவில்லை.
இந்த நிலையில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, இப்படத்தின் கதை மற்றும் படப்பிடிப்பு பற்றிய அப்டேட்களை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: : 'தனுஷ் 55' படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இன்னும் 5 அல்லது 6 மாதங்களில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளோம். நம்முடைய அன்றாட வாழ்க்கைக்கு உள்ளேயே இருக்கக் கூடிய பலரை பற்றிய கதை இது. ஆனால் இப்படியெல்லாம் ஆட்கள் இருக்கிறார்களா என்று நாம் உணர்வதே இல்லை. நம்முடைய வாழ்க்கை இயல்பாக இயங்கிக் கொண்டே இருப்பதற்கு இவர்கள் எல்லாம் மிக முக்கியமான காரணம். அப்படிப்பட்ட மனிதர்கள் நிறைய பேர் நம் கண்ணுக்கு தெரியாமல் நமக்கிடையே உள்ளனர். அவர்களுக்கான ஒரு பிரதிநிதித்துவமாக இந்த படம் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.