பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

1948ம் ஆண்டு ஜெமினி ஸ்டூடியோ தயாரித்த படம் 'சக்ர தாரி'. சக்ரத்தை தாங்கி நிற்பவன் என்று இதன் பொருள். அதாவது கிருஷ்ணரை குறிக்கும் சொல்.
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பண்டர்பூர் என்ற கிராமத்தில் கோரகும்பர் என்ற கிருஷ்ண பக்தர் இருந்தார். சதாசர்வ காலமும் அவர் கிருஷ்ணரையே நினைத்துக் கொண்டு சம்பாதிக்காமல் இருப்பது மனைவிக்கு பிடிக்கவில்லை. ஒரு நாள் பானை செய்வதற்கு மண் மிதிக்கும்போது தன் குழந்தை காலுக்கு அடியில் விளையாடுவதைகூட மறந்து தன் குழந்தையையும் மிதித்து கொன்று விடுகிறார். அதன்பின் கணவன் மனைவி இடையே நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் கதை.
புகழ்பெற்ற இந்த கதை இந்தியாவின் பல மொழிகளில் திரைப்படமானது. தமிழில் 'சக்ர தாரி' என்ற பெயரில் தயாரானது. இதில் கோரகும்பராக சித்தூர் நாகைய்யா நடித்தார். அவரது மனைவியாக புஷ்பவல்லி நடித்தார். ஜெமினி கணேசன் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கினார். எம்.டி.பார்த்தசாரதி இசை அமைத்தார்.
படம் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது. படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ஹிட்டாது. படம் வெளியாகி ஒரு வருடத்திற்கு பிறகு படத்தை கேவா கலர் டெக்னாலஜிக்கு மாற்றம் செய்யப்பட்டு மீண்டும் வெளியிடப்பட்டது. அப்போதும் 50 நாட்கள் வரை ஓடியது.