அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
பாலிவுட்டில் ஷாருக்கான், தீபிகா படுகோன் ஜோடி தான். இப்போது வரை சக்சஸ்புல் ஜோடியாக ரசிகர்களிடம் வலம் வருகின்றனர். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த ஓம் சாந்தி ஓம், சென்னை எக்ஸ்பிரஸ், பதான், ஜவான் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றவை. இப்படி பதான், ஜவான் படத்தை தொடர்ந்து இவர்கள் தற்போது சித்தார்த் ஆனந்த் டைரக்ஷனில் உருவாகி வரும் கிங் என்கிற திரைப்படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த படத்தில் ஹைலைட்டான அம்சமாக ஷாருக்கானின் மகள் சுஹானா கான் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார்.
இந்த படத்தில் சுஹானா கானுக்கு அம்மாவாக தீபிகா படுகோன் நடிக்கிறார் என்கிற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. படத்தில் கதாநாயகி அந்தஸ்து பாதித்துவிடாமல் அதேசமயம் இந்த அம்மாவின் கதாபாத்திரத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து அவரை சுற்றி கதை சுழலுமாறு பின்னப்பட்டுள்ளதாம். ராணுவ வீரரான ஷாருக்கான் இளம் பெண்ணான சுஹானா கானுடன் இணைந்து அவரது குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய துயர நிகழ்வுக்கு பழி தீர்க்கும் விதமாக சவால்களை எதிர்கொள்கிறார் என்பது போன்று கதை உருவாக்கப்பட்டுள்ளதாம்.