மாமன் பட டிரைலர் : ஐஸ்வர்யா லட்சுமிக்கு ஏற்பட்ட பயம் | பாலிவுட்டில் கூடுதல் கவனம் செலுத்தும் ஸ்ரீலீலா | ஆபரேஷன் சிந்தூர் - பிரபலங்களுக்கு எச்சரிக்கை விடுத்த பவன் கல்யாண் | கவுதம் மேனன் இயக்கத்தில் சந்தானம்? | ரெட்ரோ படத்திற்கு பின் கார்த்திக் சுப்பராஜின் அடுத்த படம் பற்றிய அப்டேட் | படக்குழுவுக்கு இரண்டாவது முறையாக பிரேக் கொடுத்த ராஜமவுலி | தயாரிப்பாளராக உருவெடுத்தது ஏன்? : சமந்தா வெளியிட்ட தகவல | 6 ஆண்டுகளுக்குப் பிறகு தெலுங்கில் கோவை சரளா | மும்பையில் அமீர்கானை சந்தித்த அல்லு அர்ஜுன் | 'ஆபரேஷன் சிந்தூர்' : சினிமா பிரபலங்கள் வாழ்த்தும், பாராட்டும் |
தியேட்டர்களில் படம் ஓடுகிறதோ... இல்லையோ... ஒவ்வொரு வாரமும் குறைந்தது 5 அல்லது 6 படங்களாவது வெளியாகிக் கொண்டுதான் இருக்கின்றன. இரண்டரை மாதங்களில் 50க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகிவிட்டது. இந்த வாரம் மார்ச் 21ல் வெளியான படங்களின் நிலைமை என்ன என்று பார்ப்போம்.
அஸ்திரம் : அரவிந்த் ராஜகோபால் இயக்கத்தில் ஷாம் நடித்து திரைக்கு வந்துள்ள படம் அஸ்திரம். தமிழகம் முழுவதும் சுமார் 200 திரையரங்கில் வெளியானது. இந்த திரைப்படம் சுமாரான வசூலை மட்டுமே பெற்றுள்ளது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும் வசூலில் பெரிதாக ஜொலிக்கவில்லை என்பதே உண்மை.
எனை சுடும் பனி : ராம் சேவா இயக்கத்தில் நட்ராஜ், பாக்யராஜ், சிங்கம் புலி, உபாசனா மற்றும் பலர் நடித்த இந்த திரைப்படம் சுமார் 70 அரங்கம் வரை வெளியானது. பல அரங்கில் பார்க்க ஆளே இல்லாததால் காட்சிகள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ட்ராமா : தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில் விவேக் பிரசன்னா, சாந்தினி மற்றும் பலர் நடித்த இந்த படத்துக்கு சராசரியான படம் என்ற விமர்சனம் கிடைத்துள்ளது. இருந்தாலும் வசூல் ரீதியாக பார்க்கும்போது பெரிதளவில் இல்லை என்பதே உண்மை.
பேய் கொட்டு : லாவண்யா இயக்கத்தில் தீபா ஷங்கர், ஸ்ரீஜா ரவி மற்றும் பலர் நடித்த இந்த படம் பெரிதாக வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்களை கவரவில்லை என்பதே உண்மை.
ஆக மொத்தம் இந்தவாரம் வெளியான 4 படங்களில் ஷாமின் அஸ்திரம் மட்டுமே நல்ல படம் என்ற விமர்சனத்தை பெற்றுள்ளது. ஆனால் அதுவும் வசூலை குவிக்குமா என்பது சந்தேகமே...!