இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட சித்தாவின் படத்தை இயக்கிய எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்து வருகின்ற மார்ச் 27 அன்று வெளியாகவுள்ள திரைப்படம் வீர தீர சூரன். துஷாரா விஜயன், எஸ்ஜே சூர்யா, சூராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் பைவ் ஸ்டார் செந்தில் வெளியிடுகிறார்.
இந்த படத்தின் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் வீர தீர சூரன் இரண்டாம் பாகம் இப்போது வெளியிடப்பட்டு இதன் முதல் பாகத்தை ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் சுமார் 500 லிருந்து 600 திரையரங்கம் வரை வெளியாகுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
வீர தீர சூரன் படம் தியேட்டர்களில் வெளியாக உள்ள நிலையில் இதன் டிஜிட்டல் ரைட்ஸ் இன்னும் உறுதிபடுத்தப்படாத விஷயமாகவே உள்ளது. ஒரு வேலை இரண்டு பாகமும் வெளியான பிறகு இரண்டு பாகங்களையும் சேர்த்து OTT தளத்தில் வெளியிடலாமா என்ற யோசனையில் படக்குழு உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.